ஜெயலலிதாவின் மௌனம் படுகொலையைவிடக் கொடுமையானது

Published On:

| By Balaji

சேலம் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் ‘மனிதம் தொலைந்திடலாமோ?’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி பங்கேற்று கருத்துரையாற்றினார். வாசுகி, “சாதியின் பெயரால் பட்டப்பகலில் நடுரோட்டில் ஒருவர் படுகொலை செய்யப்படுகிறார் . இந்த சாதி ஆணவக்கொலையை கண்டிக்காத முதல்வரின் செயலும், கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவிற்கு ஆறுதல் கூறாத செயலும் அந்த படுகொலையை விட கொடூரமானது என முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்துப் பேசினார். மேலும், “மனிதன் மலத்தை மனிதன் அள்ளுவது ஆன்மீக பணியென்றால், அதை அய்யா மோடி அவர்கள் இனி செய்யலாமே?” என்று குறிப்பிட்டார்.,”

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share