சென்னை மெட்ரோ: கட்டணத்தை ரூ 50 ஆக உயர்த்த பரிசீலனை!

Published On:

| By Balaji

சென்னை மெட்ரோ ரயில் தற்போது ஆலந்தூர் மற்றும் கோயம்பேடு இடையே இயக்கப்படுகிறது.குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 10ம் அதிகபட்சமாக 40 ரூபாயும் வசூலிக்கப்படுகின்றன.இந்நிலையில் இரண்டாம் கட்டமாக விமான நிலையத்தில் இருந்து சைதாப்பேட்டையில் உள்ள சின்னமலை வரை இரண்டாம் கட்ட சேவை துவங்கப்பட இருக்கிறது.இந்த சேவை துவங்கும் போது, மெட்ரோவின் அதிகபட்ச கட்டணமாக 50 ரூபாய் நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.மற்ற பகுதிகளிலும் மெட்ரோ துவங்கப்படும்போது விலை குறைக்கப்படும் என்று தான் ஆரம்பத்தில் பேசப்பட்டது.தற்போது விலையேற்றம் என்பது பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share