சென்னை பல்கலை: பேராசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல்

Published On:

| By Balaji

சென்னை பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் எம்.எல். இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ரஞ்சி. இவர் நேற்று முன் தினம் துறைத்தலைவர் பேராசிரியர் டேவிட் அம்ப்ரோஸைச் சந்தித்து தனது தேர்வு மதிப்பெண் தொடர்பாக விடைத்தாளைக் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை மாணவர்கள் சிலர், பேராசிரியர் அம்ரோஸைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். அப்போது, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற திருக்குறள் குறித்த கருத்தரங்குக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் வந்தார். போலீசாரால் மாணவர்களை விலக்க முடியாததால், தருண் விஜய் கிடைத்த இடைவெளியில் உள்ளே சென்று கருத்தரங்கில் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சி முடிவுக்குப் பின்னர், ஒன்று திரண்ட மாணவகள் பேராசிரியர் அம்ப்ரோஸின் அலுவலக அறைக்குள் சென்று அவரைத் தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போலீஸில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், மாணவர்கள் மீது வந்த புகார் குறித்து பல்கலைக்கழக பதிவாளர் டேவிட் ஜவஹர் மாணவர் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார். புகாருக்குள்ளான இந்த மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய பல்கலைக்கழக நிர்வாகத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாணவர்கள் தரப்பில் கூறியதாவது, பேராசிரியர் அம்ப்ரோஸ் வெளியாட்களை வைத்து மாணவர்களைத் தாக்கியுள்ளார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ADVERTISEMENT
Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share