சுங்கச்சாவடி கட்டண உயர்வு – ராமதாஸ் கண்டிப்பு

Published On:

| By Balaji

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ள 18 சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் நாளை மறுநாள் நள்ளிரவு (ஏப்ரல் 1) முதல் ரூ.10 முதல் ரூ.25 வரை உயர்த்தப்படவிருக்கின்றன. இதற்குக் கண்டனம் தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது சாலைக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள 18 சுங்கச்சாவடிகளிலும் செய்யப்பட்ட முதலீடு பல ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டது. முதலீடு எடுக்கப்பட்ட பிறகும் 100% கட்டணம் வசூலிக்கப்படுவது சட்டவிரோதம் ஆகும். இதுவே சட்டவிரோதம் எனும் போது ஆண்டுக்கு ஒருமுறை 10 முதல் 15% வரை கட்டணம் உயர்த்தப்படுவது கருணையற்ற செயல் ஆகும். தமிழ்நாட்டில் மட்டும் தான் இப்படி என்று கூற முடியாது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் இதேநிலை தான் காணப்படுகிறது. டீசல் விலை அதிகரிப்பால் வாகன வாடகை அதிகரித்துள்ள நிலையில், சுங்கக்கட்டணமும் உயர்த்தப்படுதால் காய்கறிகள், உணவு தானியங்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் மீது தாங்க முடியாத சுமை சுமத்தப்படும். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் தணிக்கையாளர்கள், மக்கள் அடங்கிய குழுவை அமைத்து சுங்கச்சாவடியின் வருவாயை பொதுத்தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.,”

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share