என்.எஸ்.ஜி-யில் உறுப்பினர் – இந்தியா கடந்துவந்த பாதை

Published On:

| By Balaji

என்.எஸ்.ஜி எனப்படும் அணு எரிபொருள் வழங்கும் நாடுகளின் குழுமத்தில் உறுப்பினராவதற்காக இந்தியா விண்ணப்பித்துள்ளது. என்.எஸ்.ஜி உறுப்பினர் நாடுகளான அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்குப் பிரதமர் மோடி ஜுன் 4ம் தேதி அன்று பயணம் செய்ய இருக்கிறார். இந்த பயணத்தின்போது மோடி என்.எஸ்.ஜி உறுப்பினராவது குறித்து இந்த நாடுகளை வலியுறுத்த இருக்கிறார்.

இந்தப் பயணத்துக்கு பிறகு ஜுன் 9 – 10 தேதிகளில் என்.எஸ்.ஜி பேரவை கூடும்போது இந்தியாவின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட இருக்கிறது. ஜுன் 24ம் தேதி கூடும் பேரவையில், இந்தியா உறுப்பினராவது குறித்து முடிவெடுக்கப்படும்.

ADVERTISEMENT

என்ன பலன்கள் கிடைக்கும்?

இந்தியா சுற்றுச்சூழல் சார்ந்து தன் வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டியுள்ளது. 40% அளவில் மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை எட்டும் நோக்கில் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு என்.எஸ்.ஜி-யில் உறுப்பினராவது உதவக்கூடியதாகும். மேலும் நிலையான வளர்ச்சிக்கும் அரசைச் சார்ந்து ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நிலையான வளர்ச்சியும் பெற இந்த உறுப்பினர் அந்தஸ்து உதவும்.

ADVERTISEMENT

இந்தியா கடந்து வந்த பாதை?

1974-ல் இந்தியா முதன்முறையாக அணு ஆயுத சோதனை நிகழ்த்தியது. இதனையடுத்து, அணுசக்தியைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் என்.எஸ்.ஜி தொடங்கப்பட்டது. இந்தியாவின் அணு ஆயுத சோதனை சர்ச்சையானதால், அதை வைத்தே இந்தியாவுக்கு உறுப்பினர் அந்தஸ்து கொடுக்கக்கூடாது என சீனா வலியுறுத்தி வந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், 2005 – 06 காலகட்டத்தில் அமெரிக்கா இந்தியாவின் அணு பயன்பாட்டை அங்கீகரித்தது. அணு வியாபாரத்துக்கும் சம்மதித்தது.

2008-ல் என்.எஸ்.ஜி இந்தியாவின் அணு ஆயுத வர்த்தகத்தை ஏற்றுக்கொண்டது. அமெரிக்காவின் அழுத்தத்தை ஏற்று சீனாவும் சம்மதித்தது. 2015-ம் ஆண்டு இந்திய குடியரசு தின விழாவுக்கு ஒபாமா வந்தபோது அமெரிக்கா – இந்தியா இடையில் அணு ஆயுத நம்பகத்தன்மை குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஆண்டு மே 12ம் தேதி இந்தியா உறுப்பினராவதற்கு விண்ணப்பித்தது. மே 24 அன்று சீனா சென்றிருந்த குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இதுதொடர்பாக சீனாவை வலியுறுத்தினார்.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share