இந்தியா வரும் வங்கதேச சுற்றுலாப் பயணிகள்: என்ன காரணம்?

Published On:

| By Balaji

சுற்றுலாப் பயணிகளாக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு எந்தெந்த நாட்டிலிருந்து பயணிகள் வருகிறார்கள் என்பதுபற்றிய புள்ளிவிபரத்தை மத்திய சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு சுவாரசியமான தகவல் தெரியவந்துள்ளது. 2015ம் ஆண்டு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளில் 15.1 சதவிகிதத்தினர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.14.1 சதவிகிதம் பெற்று வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாவது இடத்தில் உ ள்ளனர். அடுத்த இடத்தில் 10.8 சதவிகிதம் பெற்று ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். வங்கதேசத்தினர் அதிகளவில் இந்தியாவுக்கு வருவதற்கு என்ன காரணம்? என்று ஆராய்ந்தால், வங்கதேசத்தில் ஐரோப்பிய தூதரகம் என்று எதுவும் இல்லை. எனவே அந்நாட்டிலிருந்து ஐரோப்பா செல்வதற்கு இந்தியா வந்துதான் விசா எடுக்கவேண்டிய நிலை உள்ளது. இதன்காரணமாகவே வங்க தேசத்தினர் பலரும் இந்தியா வருகின்றனர்.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share