இந்தியா இ-குப்பைகள்: ஆண்டுக்கு 30 சதவிகிதம் அதிகரிப்பு

Published On:

| By Balaji

உலகில் அதிகளவில் எலக்ட்ரானிக் குப்பைகளை உருவாக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தவகை குப்பைகள் ஆண்டுக்கு முப்பது சதவிகிதம் அதிகரிப்பதாக அசோசெம் – சிகைனடிக்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது, 2020ம் ஆண்டு, ஆண்டுக்கு 52 லட்சம் மெட்ரிக் டன் என்றளவில் இருக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. உலகளவில் எலக்ட்ரானிக் குப்பையானது 2016ம் ஆண்டைப் பொருத்தவரை 93.5 மில்லியன் டன்னாக இருக்கிறது. இது, 2018ம் ஆண்டு 130 மில்லியன் டன்னாக இருக்கும் என்று இந்த ஆய்வில் கூறப்படுகிறது. இது, தற்போது ஆண்டுக்கு ஆண்டு 17.6 சதவிகிதம் அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்தியாவில் இருக்கும் எலக்ட்ரானிக் குப்பைகளில் 70 சதவிகிதம் கணினி தொடர்பானவை. 12 சதவிகிதம் தொலைத்தொடர்பு தொடர்பானவை. 8 சதவிகிதம் எலக்ட்ரிக்கல் குப்பைகள், 7 சதவிகிதம் மருத்துவக் குப்பைகள். இவ்வளவு எலக்ட்ரானிக் குப்பைகள் உருவானாலும், வெறும் 1.5 சதவிகிதமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்பதே அதிர்ச்சியூட்டும் தகவல் ஆகும்.

ADVERTISEMENT
Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share