இந்தியாவும் பாகிஸ்தானும் கைகோர்க்க வேண்டும்: மெஹபூபா முஃப்தி

Published On:

| By Balaji

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘பரம எதிரிகளாக சண்டையிட்டுக்கொண்டிருந்த அமெரிக்காவும் ஈரானும் அண்மையில் மோதலை முடிவுக்கு கொண்டுவந்து நட்புறவைத் தொடங்கியுள்ளன. அதேபோல, தெற்காசியப் பிராந்தியத்தில், அமைதி, முன்னேற்றம் எனும் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஏன் கைகோர்க்க முடியாது? மாநிலத்தில் ஏழ்மை நிலையில் இருப்போரை மீட்டெடுக்க மத்திய அரசின் திட்டங்களால்தான் முடியும்’ என்று கூறினார்.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share