இந்தியாவின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நியாயமானது: அமெரிக்கா

Published On:

| By Balaji

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியநிலையில், மேலும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகள் நடத்த இந்தியா தயாராக இருக்கிறது என, இந்திய இராணுவத் தலைவர் பிபின் ராவத் வெகுசமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியா தன்னை பாதுகாத்துக் கொள்ள சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகள் நடத்துவது நியாயமானது என அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தொடர்பாக அமெரிக்கா கருத்து தெரிவிப்பது இதுவே முதல்முறை. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் துறையின் துணைச் செயலாளரான நிஷா பிஸ்வால், ‘இந்தியா, அதன் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதேசமயம் போர் மேலும் விரிவடையாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என, இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

ADVERTISEMENT

மும்பை தாக்குதலில் முக்கியப் பங்குவகித்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஹஃபீஸ் சயிதுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்கா, பாகிஸ்தானிடம் கோரிக்கைவைத்துள்ளது. மேலும் ஜெய்ஷ்-இ-மொஹமத் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் எனும் இந்தியாவின் நடவடிக்கையை சீனா தடுத்து நிற்பது குறித்தும் அமெரிக்கா பேசியிருக்கிறது. அதிபர் ஆட்சிக் காலம் முடியவிருக்கும் ஒபாமாவின் தூதர் குழுவில் முக்கியப் பங்குவகித்த நிஷா, சீனாவின் நடவடிக்கைகள் ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share