அமெரிக்கா – இந்தியா ராணுவ ஒத்துழைப்பு: செனட் அவை ஒப்புதல்

Published On:

| By Balaji

16.06.16 அன்று இந்தியாவுடன் ராணுவ ஒத்துழைப்பு வழங்குவதற்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான சட்டத்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

செனட் உறுப்பினர் ஜான் சுல்லிவன், ‘இந்தியாவுடன் ராணுவ ஒத்துழைப்பு’ என்ற தலைப்பில், சட்டத்திருத்த மசோதாவை அவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவை அனைத்து செனட் உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரித்தனர். இந்த மசோதாவில், பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக ஆய்வு செய்தல், ராணுவக் கொள்கைகள், முக்கிய விவகாரங்களில் திட்டமிடல், ராணுவத் தளவாடங்களில் பரஸ்பர ஆதரவு, பேரிடர் காலங்களில் ஒத்துழைப்பு ஆகியவற்றில் இந்திய ராணுவத்துடன் அமெரிக்க ராணுவம் இணைந்து செயல்படுவதை பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, அமெரிக்கா, இந்தியாவை நெருக்கமான ராணுவக் கூட்டாளியாக சேர்க்கும் நோக்கில், அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அதிகாரச் சட்டத்தில் சிறிய திருத்தம் செய்யும் மசோதா 15.06.16 அன்று செனட் அவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், சில உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக மசோதா தோல்வியடைந்தது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் விளக்கமளித்துள்ளார். விகாஸ் ஸ்வரூப் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அமெரிக்க செனட் அவையில் இந்தியாவுக்கு ஆதரவாகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது என்பது ஊடகச் செய்திகள் மூலம்தான் வெளியுறவு அமைச்சகத்துக்குத் தெரியவந்துள்ளது. 2017ம் ஆண்டு அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அதிகாரச் சட்டத்தை வடிவமைக்கும் பணி இப்போதுதான் அந்நாட்டில் நடைபெற்று வருகிறது. எனவே, இப்போது உடனடியாக சட்டத் திருத்தத்தின் மூலம் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா முடிவு எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் அவசரமானது. இந்தியாவை நெருங்கிய ராணுவக் கூட்டாளியாக சேர்த்துக் கொள்ள அமெரிக்கா எடுத்த முடிவை இனிமேல்தான் தேசியப் பாதுகாப்பு அதிகாரச் சட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இத்தகவலைத் தெரிவிக்கும் வகையில்தான் அது தொடர்பான ஓர் அம்சம் செனட் அவையில் கொண்டுவரப்பட்டது” என்றார்.,”

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share