தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ’காலபைரவா’ திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் இன்று(அக்.29) ராகவா லாரன்ஸின் பிறந்த நாளை முன்னிட்டு அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸின் 25ஆவது படமான இந்தத் திரைப்படம் ஒரு பான் இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படம் என்றும் அந்தப் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தை தயாரிப்பாளர் கொனேரு சத்யனரத்னாவின் ஏ ஸ்டூடியோஸ், நீலாட்ரி புரொடக்ஷன்ஸ், ஹவ்விஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் தொடங்கப்படவுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்படவுள்ள இந்தத் திரைப்படம் வருகிற 2025 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் இந்தத் திரைப்படம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
இயக்குநர் ரமேஷ் வர்மா தெலுங்கில் ‘ரக்ஷசுடு’. ‘கில்லாடி’ போன்ற திரைப்படங்களை இயக்கியவர் ஆவார்.ராகவா லாரன்ஸ் தற்போது வெற்றி மாறனின் எழுத்தில் துரை செந்தில் குமாரின் இயக்கத்தில் ஒரு படத்திலும், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘பென்ஸ்’ என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா