‘ஒன்னு புதைக்க விடுங்க இல்ல, எரிக்க விடுங்க’ன்னு சுடுகாட்டுல வச்சு கவுண்டமணி கடுப்பா ஒரு டயலாக் பேசுவாரே ஞாபகம் இருக்கா. அவ்வளவு கடுப்புல இருக்குறாங்க நம்ம ஜனங்க. ஒன்னு எல்லா அணிகளும் இணைஞ்சு பேசாமா நாலு வருசத்தையும் முடிங்க. நாங்களும் கண்ணை மூடிக்கிட்டு செவனேன்னு இருந்துருறோம். இல்ல சட்டு புட்டுன்னு ஆட்டைய களைச்சுட்டு அடுத்து ஆகுற வேலையை பார்க்கலாம். ஒரே இழுபட்ட பொழப்பா போச்சு. தினகரன் இப்பவாது என்னத்தையாவது செஞ்சு ஸ்கோர் பண்ணுவார்னு பார்த்தா நாஞ்சில் சம்பத்தை பேச சொல்லி வேடிக்கை பார்க்குறாரு. அவரு ப்ரஸ்ட்ட எதுகை மோனைல பேச அதுக்கு கூட இருக்குறவங்க கை தட்டிகிட்டு இருக்காங்க. என்னையா நடக்குது இங்க. எதிர்கட்சி குடைச்சல் கொடுப்பாங்கன்னு தெரிஞ்சு தான் வந்த வேகத்துல பறந்துட்டாரு ஆளுநர். இந்த கொடுமையை யார்ட்டயாவது சொல்லி புலம்பலாம்னு பார்த்தா பயக எல்லாம் விவேகம் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோக்கு டிக்கெட் வாங்க ஓடிக்கிட்டு இருக்காய்ங்க. வந்ததுதான் வந்தீங்க அப்படியே அப்டேட்ட படிச்சுட்டு போயிடுங்க.

**வாசுகி பாஸ்கர்**
நண்பர்: “உங்க பெண்ணை பெரியார் சொன்னபடி வளர்ப்பிங்களா?”
நான்: “பொண்ணுங்களை இயல்பா விட்டாலே அவுங்க பெரியார் சொன்ன மாதிரி தான் இருப்பாங்க, சங்கராச்சாரியார் சொன்ன மாதிரி வளர்க்க தான் நான் மெனக்கிடனும்”
**Venpura Saravanan**
டிடிவி தினகரனால் புதுச்சேரி நட்சத்திர விடுதியில் அடைக்கப்பட்டுள்ள எடப்பாடி அரசுக்கு எதிரான எம்எல்ஏக்களை விடுவிக்குமாறு… முன்பு, சசிகலாவால் கூவத்தூர் ரிசாட்டில்
சிறைவைக்கப்பட்ட ஓபிஎஸ் அரசுக்கு எதிரான எம்எல்ஏக்கள் முற்றுகை!

**karthik_twittz**
அனைவரையும் அரவணைத்து செல்லும் முதல்வர் வேண்டும்- சி.ஆர்.சரஸ்வதி
அதுக்கு சினேகன் தான் முதலமைச்சராகணும்!!!?
**Kozhiyaar**
இவங்க ஆ, ஊனா அந்த அம்மா சமாதிக்கு போறாங்க!!
ஒரு நாள் இல்ல ஒரு நாள் அவங்க கடுப்பாகி எந்திரிச்சு வர போறாங்க!!!
**கருப்பு கருணா**
தனியார் பள்ளிகளில் படிப்போர் மேற்படிப்பையும் தனியார் கல்லூரிகளிலேயேதான் படிக்கணும்ன்னு ஒரு சட்டம் போடணும்யா…

**Kozhiyaar**
அப்பா அம்மாவை எதிரப்பார்க்காமல் நாம் வாழ ஆரம்பிக்கும் சமயத்தில் தான், அம்மா அப்பா நம்மை எதிர்ப்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்!!
**Vimaladhitha Maamallan**
ஒருவருடமாகியும் தமிழகத்திற்கு முழுநேர ஆளுநர் இல்லை.
முழு மெஜாரிட்டி இருந்தும் முழுகட்சி ஆட்சியே இல்லையாம் கவர்னர் இல்லாததுதான் பெரிய குறையா
**Villavan Ramadoss**
ஓ. பி சிந்தனைச் சிதறல்கள்.
ஊழல் ஒழிப்பு யுத்தம் என்பது,
உரிய பங்கை போராடிப் பெறுவதே.
ஜெய் மோடிஜி.

**Kozhiyaar**
இந்த நாட்டுலயே, ஏன் இந்த வேல்டுலயே ஆவிய கேட்டு ஆட்சி நடத்துறது எங்க ஊர்ல்தாங்கோ!!!
**கருப்பு கருணா**
கருப்புப் பணம் ஒழிந்தது போலவே, நீட் வந்தால் ‘நீட்டான’ மருத்துவர்கள் கிடைப்பார்கள் – தமிழிசை
அப்போ…அந்தக்காலத்துல நீட்டே இல்லாம மருத்துவரான நீங்க நீட்டான மருத்துவரா..இல்ல…கோணையான மருத்துவரா தாயி..?
**Anbu_Mariyal**
நான் ஐ லவ் யூ சொன்னா
திருப்பி எனக்கு ஐ லவ் யூ சொல்ற
ஒரே ஜீவன்
என்
டாக்கிங் டாம் மட்டும் தான்….

**Villavan Ramadoss**
சரி, நீட் விவகாரத்தில் பிரச்சினை பண்ணாம இருக்கோம்.
ஆனா எங்களுக்கு தனியா ஒரு சுப்ரீம் கோர்ட் இருக்குற மாதிரி ஏற்பாடு பண்ணிடுங்க.
**MJ_twets**
டிடிவி தினகரன்- வைத்திலிங்கம் எம்பி ஆதரவாளர்கள் மோதல்: தஞ்சாவூரில் பதற்றம்
சூடா காப்பி சொல்லுங்க
**Scientist_Mani**
இந்த வாழ்க்கை பல நேரங்களில் நமக்கு கத்துக்கொடுக்குதா இல்ல, நாம வாழுற லட்ஷணத்த பாத்து காரி துப்புதானே தெரியல

**Kannan_Twitz**
காசிருந்தால் ரிசார்ட்டும் சிறைச்சாலை ஆகும்,
சிறைச்சாலையும் ரிசார்ட் ஆகும்
-H.ராஜா
ஆம் அதிகாரம் இருந்தால் ஓட்டு வாங்காமலும் ஆட்சி அமைக்கலாம்
**MJ_twets**
சின்ன வயதில் வயதை கேட்டால் 2,3 கூட்டி சொல்வதும்,
பெரிய வயதில் வயதை கேட்டால் 2,3 வயதை குறைத்து சொல்வதும்,
#என்னதான்_டிசைனோ

**krajesh4u**
இந்த Bluewhale கேம முறியடிக்க ஒரு ஐடியா.. அதே பேர்ல ஒரிஜினலா ஒரு App/வெப்சைட் ஆரம்பிச்சு 50 day fun task கொடுத்திடனும்.
**Gopi**
முன்னவெல்லாம் மழை வந்தா..குளம், குட்டை, ஏரியெல்லாம் ரொம்பும்.
இப்பல்லாம் ரோட்டுல உள்ள குழி ரொம்பவே மழை தண்ணிலாம் சரியா போய்டுது.
**amuduarattai**
முன்பு,அதிக வாகனங்கள் செல்லும் சாலை அருகில் டாஸ்மாக் கடைகள் இருந்தன.இப்போது,டாஸ்மாக் கடைகள் இருக்கும் சாலை வழியாக,அதிக வாகனங்கள் செல்கின்றன

**yugarajesh**
ஆட்சியே கவிழ்ந்தாலும் சசிகலா, தினகரன் குடும்பத்திற்கு அதிமுகவில் இடமில்லை-ஆறுகுட்டி MLA
#ஆட்சி கவிழ்ந்தால் இனி உங்களுக்கே இங்க இடமில்லை..!!
**Jeytwits**
கைதட்டல் வாங்கனும்னா ஜெயிக்கனும்னு அவசியம் இல்ல..ஜெயிச்சவங்க பக்கத்துல கூட நின்னுக்கலாம்..பிக்பாஸில் சுஜா Strategy!!

**கருப்பு கருணா**
சந்திப்பு காண்டம் முடிந்தது!
இப்போ நீக்கும் காண்டம் ஆரம்பம்..
நீங்க வேணும்ன்னா பாருங்க..ஆர்வக்கோளாறுல எவனோ ஒருத்தன் அம்மாவையே அதிமுகவுலயிருந்து நீக்கப்போறான்..
(அவங்கதான் செத்துப்பூட்டாங்களேன்னு அறிவாளித்தனமா கமெண்ட் போடக்கூடாது..ஏன்னா அவங்கதான் நிரந்தர பொதுச்செயலாளர்…அக்காங்..)
-லாக் ஆஃப்









