நேற்று பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரு குண்டுவெடிப்பு நடந்தது. இதில், 35 பேர் இறந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதன்காரணமாக, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் பலத்த சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். பார்வையாளர்களுக்கு நாளைவரை தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள கேமராக்கள் மூலமாக தீவிரமான கண்காணிப்பு நடத்தப்பட்டு வருவதாக சென்னை விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
