தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் தனது கட்சி நிர்வாகிகளுடன் சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது, ஜான்பாண்டியன் 5 தொகுதிகளை தங்கள் கட்சிக்குத் தரும்படி கேட்க, ஜெயலலிதா முகத்தைக்கூட பார்க்காமல் திருப்பிக் கொண்டார். 3 தொகுதிகளாவது தரும்படி ஜான்பாண்டியன் இறங்கிவர, ஒரு சீட். அதுவும் எக்மோர்லதான் நிக்கணும். நான் சொன்னா சொன்னதுதான்” என, ஜெயலலிதா கூறியிருக்கிறார். ‘ஒரு சீட், அதுவும் எக்மோர்ல நின்னு எப்படி ஜெயிக்கறது’ என யோசிக்கிறார் ஜான்பாண்டியன், 2 சீட் கொடுத்தால் திமுக கூட்டணிக்கு இடம்பெயர அவரது தரப்பு திமுக-வுக்கு தூதுவிட்டிருக்கிறது. ஏற்கனவே, புதிய தமிழகம் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதால், திமுக தரப்பு அமைதி காத்து வருகிறது.,”
திமுக-வுக்கு ஜான்பாண்டியன் தூது?
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








