மதுரை- திண்டுக்கல் பாசஞ்சர் ரயில் திருச்சி வரை நீட்டிக்கப்படுமா?

Published On:

| By Mathi

Will the Madurai- Dindigul Passenger Train Be Extended to Trichy?

மதுரை- திண்டுக்கல் இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலை (Passenger Train) திருச்சி வரை நீட்டிக்க வேண்டும் என்று கரூர் மக்களவை தொகுதி எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தி உள்ளார்.

திண்டுக்கல் – மதுரை; மதுரை- திண்டுக்கல் இடையேயான பாசஞ்சர் ரயில், பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அம்பாத்துரை, கொடைரோடு, வாடிப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர், கூடல்நகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

ADVERTISEMENT

இந்த பாசஞ்சர் ரயில் சேவையை திருச்சி வரை நீட்டிக்க வேண்டும் என்று ரயில்வே வாரியத் தலைவர் சதீஷ் குமாரிடம் நேரில் வலியுறுத்தி உள்ளார் கரூர் எம்.பி. ஜோதிமணி.

ரயில்வே வாரியத் தலைவரிடம் ஜோதிமணி எம்.பி. கொடுத்த கோரிக்கைகள்:

ADVERTISEMENT

அய்யலூர் ரயில் நிலையத்தில்

  • செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (16847/16848)
  • ​திருவனந்தபுரம் – திருச்சிராப்பள்ளி இன்டர்சிட்டி சூப்பர்ஃபாஸ்ட் (22627/22628)
  • ​வைகை சூப்பர்ஃபாஸ்ட் (12635/12636) ரயில்களை நிறுத்துதல்

பாளையம் ரயில் நிலையத்தில்

ADVERTISEMENT
  • சென்னை சென்ட்ரல்- பாலக்காடு பழனி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்துதல்

மணப்பாறையில்,

  • திருப்பதி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16779/16780)
  • ​தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா சூப்பர்ஃபாஸ்ட் (20691/20692)
  • ​சென்னை எழும்பூர் – கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101/16102)
  • ​திருச்செந்தூர் – சென்னை எக்ஸ்பிரஸ் (16105/16106)
  • ​தாம்பரம் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
  • ​மதுரை – திருப்பதி எக்ஸ்பிரஸ் ஆகியவை நின்று செல்ல வேண்டும்

​வடமதுரை ரயில் நிலையத்தில்

  • ​பாண்டியன் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12637/12638) இரு மார்க்கங்களிலும் நின்று செல்லுதல்
  • ​திருவனந்தபுரம் – திருச்சிராப்பள்ளி இன்டர்சிட்டி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22627/22628)

ஆகியவை நின்று செல்ல வேண்டும்.

மேலும் மதுரை- திண்டுக்கல் பாசஞ்சர் ரயிலை திருச்சி வரை நீட்டித்து வடமதுரையில் நின்று செல்ல வேண்டும்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share