தமிழ்நாட்டில் சென்னை உட்பட 8 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) நேற்று ஆகஸ்ட் 12-ந் தேதி அதிரடி சோதனைகள் நடத்தியது.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி NIA வெளியிட்ட அறிக்கை: வங்க கடலில் பாரன் தீவுகள் அருகே (அந்தமான்) கடந்த 2024-ம் ஆண்டு நவம்பரில் மியான்மர் படகிலிருந்து 6,016.87 கிலோ மெத்தபெட்டமைன் (Methamphetamine) பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக அந்தமான் நிக்கோபார் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. மியான்மரைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது. தற்போது குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அனைவரும் நீதிதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் மிசோரம் மாநிலங்களில் உள்ள 13 இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை புதன்கிழமை சோதனை நடத்தியது.
தமிழ்நாட்டில் 8 இடங்கள் மற்றும் மிசோராமில் 5 இடங்கள் என மொத்தம் 13 இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
இதில், நெட்வொர்க்கை கண்டறிவதற்காக பல டிஜிட்டல் சாதனங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், சோதனையின் போது சென்னையில்
- ரூ. 71 லட்சம் ரொக்கம்
- 53,500 அமெரிக்க டாலர்
- 1,50,000 மியான்மர் கியாட் பறிமுதல் செய்யப்பட்டன.
