பாலநாக தேவி ஐபிஎஸ் உட்பட 10 பேர் மாற்றம்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் ஆட்சி மாறியதிலிருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். 

ADVERTISEMENT

அந்த வகையில் இன்று 10 பேரை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அதன்படி, 

ADVERTISEMENT

சென்னை சைபர் கிரைம் டிஜிபி பாலநாக தேவி சிபிசிஐடி டிஜிபி ஆகவும், 

சிபிசிஐடி ஏடிஜிபி அபின் தினேஷ் மொடாக், சென்னை சைபர் க்ரைம் ஏடிஜிபியாகவும், 

ADVERTISEMENT

காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் ஏடிஜிபி வித்யா ஜெயந்த் குல்கர்னி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாகவும், 

சென்னை புலனாய்வு பிரிவு II துணை ஆணையர் ராமமூர்த்தி, சென்னை கியூ பிரிவு எஸ்பியாகவும், 

சிபிசிஐடி வடக்கு பிரிவு எஸ்பி அர்பிதா ராஜ்புத், அண்ணா நகர் துணை ஆணையராகவும், 

அண்ணா நகர் துணை ஆணையர் ஈஸ்வரன், தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்பி ஆகவும் 

ஆவடி மத்திய குற்றப்பிரிவு எஸ்பி செந்தில்குமார், நாகப்பட்டினம் கடலோர காவல் படை எஸ்பி ஆகவும் 

சென்னை ஊழல் தடுப்பு பிரிவு (வடக்கு) எஸ்.பி சரவணகுமார், தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாகவும் 

தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி ரமேஷ்பாபு, திருநெல்வேலி நகர துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share