8% வாக்கு வங்கி கொண்ட கட்சி கூட்டணிக்கு தலைமை தாங்குவதா? திமுகவை மீண்டும் சீண்டிய மாணிக்கம் தாகூர்

Published On:

| By Kavi

புதுச்சேரியில் 8 சதவிகிதம் வாக்கு வங்கி வைத்திருக்கிற கட்சி கூட்டணிக்கு தலைமை தாங்குவதா என  திமுகவிடம் மாணிக்கம்  தாகூர் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். 

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி,  தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் திமுக -காங்கிரஸ் இடையே விவாதங்கள், பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது.   ஆட்சியில் பங்கு என்பதை திமுக திட்டவட்டமாக மறுத்து வருகிறது

ADVERTISEMENT

இந்த முறை புதுச்சேரியிலும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திமுக தீவிரம் காட்டி வருகிறது.  இந்தசூழலில் புதுச்சேரியில் 6 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக தலைமையிலே கூட்டணி அமைய வேண்டும் என்று அக்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். 

எனவே புதுச்சேரியிலும் திமுக, காங்கிரஸ் கட்சிகளிடையே முரண்பாடு அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில்,  “கூட்டணியில் 8 % ஒட்டு வைத்து உள்ள கட்சி தலைமை தாங்குமா இல்ல 26% உள்ள கட்சி தலைமை தாங்குமா? ஏன் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை இழிவாக பேச வேண்டும்?
தொடரும் இந்த முறை நல்லது இல்ல ” என்று குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share