ஆட்டோ டு ஐ.பி.எல்: ருதுராஜை வீழ்த்திய விக்னேஷ் புதூரின் கனவு சாத்தியமானது எப்படி?

Published On:

| By Kumaresan M

ஐ.பி.எல் தொடரில் சென்னையில் நேற்று (மார்ச் 23) நடந்த ஆட்டத்தில் மும்பை அணி தோல்வி கண்டது. எனினும், அந்த அணியின் இளம் வீரர் ஒருவர் சென்னை அணிக்கு சிம்மசொப்பனமாக இருந்தார். அந்த வீரர் எந்த சீனியர் அணிக்காகவும் விளையாடியதில்லை. ரஞ்சியிலும் ஆடியதில்லை. ஆனாலும், மும்பை அணி அந்த வீரரை முன்னரே கணித்து வைத்திருந்தது. முதல் ஐ.பி.எல் போட்டியிலேயே முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி கவனத்தையும் ஈர்த்துள்ளளார். அந்த வீரர்தான் விக்னேஷ் புதூர்.Who is mumbai’s Vignesh Puthur?

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தலமன்னாவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகன். 23 வயதே நிரம்பிய இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர். நேற்றைய ஆட்டத்தில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, தீபக் ஹூடா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.

கேரளா கிரிக்கெட் லீக்கில் ஆலப்புழா ரிப்பிள்ஸ் என்ற அணிக்காக விளையாடிய விக்னேஷின் திறமையை மும்பை அணி கேள்விப்பட்டதும், சத்தமில்லாமல் டிரையல்சுக்கு அழைத்தது. விமான செலவு, தங்கும் செலவு, சாப்பாடு செலவுகளையும் பார்த்துக் கொண்டது.

மும்பையில், ஜாம்பவான்கள் மகிலா ஜெயவர்த்தனே, கீரன் பொல்லார்டு, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆகியார் முன்னிலையில் பந்து வீசி அசத்தினார். ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை பார்த்து விட்டு ‘வெல்டன் பாய் ‘ என்று பாராட்டியுள்ளார். அதே வேளையில், விக்னேஷை பற்றி மற்ற ஐ.பி.எல் அணிகள் அறிந்து வைத்திருக்கவில்லை. Who is mumbai’s Vignesh Puthur?

கடந்த மெகா ஏலத்தில் லிஸ்டில் விக்னேஷின் பெயர் சொல்லப்பட்டதும் சட்டென்று சில்லறையை வீசி பையில் அள்ளிப் போட்டுக் கொண்டது மும்பை அணி. அணியின் தேர்வாளர்களும் தன் மீது வைத்த நம்பிக்கையை அவர் வீணாக்கவில்லை. முதல் ஆட்டத்திலேயே முத்ததான 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியும் விட்டார்.

விக்னேஷின் தந்தை சுனில்குமார் பெரிந்தலமன்னாவில் ஆட்டோ ஓட்டி வருகிறார். தாயார் பிந்து. இந்த தம்பதியின் ஒரே மகன்தான் விக்னேஷ். கேரள அணிக்காக 14, 19, 23 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடியுள்ளார். ஆனால், சீனியர் அணிக்காகவோ, கேரள அணிக்காக ரஞ்சி தொடரிலோ விளையாடியதில்லை. டைரக்டா ஹீரோவாதான் நடிப்பிங்கீளா?என்கிற வார்த்தையை நினைவுபடுத்தும் விதத்தில் நேரடியாக ஐ.பி.எல்– லில்தான் விக்னேஷ் களம் இறங்கியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share