கடலூர் பிரச்சாரம் : விஜய்க்கு அனுமதி.. உதயநிதி நிதி ஸ்டாலினுக்கு அனுமதி மறுப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கடலூர் மாவட்டத்தில் நாளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது

ADVERTISEMENT

கடலூரில் நாளை விஜய் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நாளைய பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிகளின்படி முதலில் யார் விண்ணப்பிக்கிறார்களோ அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஜய் முதலில் அனுமதி கேட்டு விண்ணப்பம் அளித்திருந்ததால் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக திட்டக்குடி நெய்வேலி வடலூரில் நாளை பிரச்சாரம் செய்ய உதயநிதி அனுமதி கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அனுமதி கிடைக்காததால் உதயநிதி பிரச்சாரம் வேறொரு தினத்திற்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share