சிவகங்கை தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் இன்று (ஏப்ரல் 9) முதல் மின்னம்பலம் இணையதளத்தில் வெளியாகிறது.

ADVERTISEMENT

இதில் சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

(2021 சட்டமன்ற தேர்தல், 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள்- தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

சிவகங்கை வாக்காளர்கள் – மொத்தம்276,156

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டப்பேரவை தேர்தல் வெற்றி

2024 – நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறார்.

அதிமுக சார்பில் பி.ஆர்.செந்தில்குமார், தவெக சார்பில் குழந்தை ராணி நாச்சியார், நாதக சார்பில் இந்துஜா ரமேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

2021 தேர்தலில் பி.ஆர்.செந்தில்குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரனை 11,253 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

நமது முடிவின் படி, இந்த தேர்தலில்

திமுக-35%
அதிமுக-36%
தவெக-15%
நாதக-13%
வாக்குகள் பெறும்.

ஒரு சதவிகித வாக்கு வித்தியாசத்தில் சிவகங்கை தொகுதியை அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்குமார் தக்க வைக்க வாய்ப்பிருக்கிறது. இந்த தொகுதியில் அதிமுக – திமுக இடையே டஃப் ஃபைட் நிலவுகிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாக இருக்கவும் சாத்தியம் உள்ளது.

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share