மானாமதுரை தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ. யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் வெளியாகிறது.

ADVERTISEMENT

இதில் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

(2021 சட்டமன்ற தேர்தல், 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள்- தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

மானாமதுரை வாக்காளர்கள் – மொத்தம்257,616

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டப்பேரவை தேர்தல் வெற்றி

2024 – நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

மானாமதுரை (தனி) சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் போட்டியிடுகிறார்.

என்.டி.ஏ கூட்டணியில் பாஜக சார்பில் பொன்.பாலகணபதி, நாதக சார்பில் சண்முகப்பிரியா, தவெக சார்பில் இளங்கோவன் ஆகியோர் களம்காண்கின்றனர்.

2021ல் மானாமதுரையில் தமிழரசி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.நாகராஜனை 14,091 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

நம் சர்வே முடிவு படி,

திமுக -38%
அதிமுக -35%
தவெக-13%
நாதக-13%

வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மானாமதுரையில் தமிழரசி மீண்டும் மகுடம் சூட வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாக இருக்கவும் சாத்தியம் உள்ளது.

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share