உறவுகள் குறித்து பேசும் விதம் மாறிக்கொண்டிருக்கிறது. “Open relationship” என்ற கருத்து, குறிப்பாக நகர வாழ்க்கை மற்றும் புதிய தலைமுறையினரிடையே அதிகமாக பேசப்படும் ஒன்றாக உள்ளது. ஆனால் அது என்ன? எல்லோருக்கும் பொருந்துமா? பாதுகாப்பானதா? — இந்த கேள்விகள் இன்னும் பலருக்கு உள்ளது.
Open relationship — ஒரு தெளிவான புரிதல்
மிக எளிமையாகச் சொன்னால், இது ஒரு ‘நேர்மையான ஒப்பந்தம்’. ஒரு ஜோடி (கணவன்-மனைவி அல்லது காதலர்கள்) தங்களுக்குள் இருக்கும் காதலைத் தக்கவைத்துக் கொண்டே, பரஸ்பர சம்மதத்துடன் மற்றவர்களுடன் காதல் அல்லது உடல் ரீதியான உறவு வைத்துக்கொள்வதைத் தான் “ஓபன் ரிலேஷன்ஷிப்” என்கிறோம்.
இங்கு முக்கியமான வார்த்தை ‘சம்மதம்’. ஒளிவுமறைவு இல்லாமல், ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருந்து கொண்டு, மற்றவர்களுடன் பழக அனுமதிப்பதே இதன் அடிப்படை. இது துரோகம் (Cheating) அல்ல – ஏனெனில் இதில் transparency மற்றும் mutual consent இருக்கும்.
இதில் நுழைவது பாதுகாப்பானதா?
இது “பாதுகாப்பானதா?” என்ற கேள்விக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று ஒரு வரியில் பதில் சொல்லிவிட முடியாது. இது உங்கள் மன உறுதி மற்றும் உங்கள் துணையின் மீதான நம்பிக்கையைப் பொறுத்தது. இதன் பாதுகாப்பை இரண்டு நிலைகளில் பார்க்கலாம்:
1. Emotional Safety: உறவுகளின் அடிப்படை ‘பாதுகாப்பு உணர்வு’. ஆனால், உங்கள் துணை மற்றொருவருடன் இருப்பதைக் கற்பனை செய்யும் போது உங்களுக்குள் பொறாமை, தாழ்வு மனப்பான்மை அல்லது பயம் ஏற்படுகிறதா? “என்னை விட அவர் சிறந்தவரா?”, “துணை என்னை விட்டுப் போய்விடுவாரோ?” என்ற எண்ணங்கள் உங்களை வாட்டலாம்.
உங்கள் இருவருக்கும் இடையே உள்ள பிணைப்பு மிகவும் வலுவாக இருந்தால் மட்டுமே இது பாதுகாப்பானது. ஒரு விரிசல் இருக்கும் உறவைச் சரிசெய்ய ‘ஓபன் ரிலேஷன்ஷிப்’ ஒரு மருந்தாகாது; அது விரிசலை அதிகப்படுத்தும்.
2. Physical Safety: ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் உறவு கொள்ளும்போது, பாலியல் ரீதியாகப் பரவும் நோய்கள் (STIs) குறித்த விழிப்புணர்வு மிக அவசியம்.
உடல்நலப் பாதுகாப்பிற்காக இருவருமே மிகக் கடுமையான விதிமுறைகளையும், பாதுகாப்பான உறவு முறைகளையும் (Protection) கடைப்பிடிக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒரு அலட்சியம் ஏற்பட்டாலும், அது உங்கள் இருவரின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
ஏன் இதை சிலர் தேர்வு செய்கிறார்கள்?
சில தம்பதிகள், traditional monogamy எல்லோருக்கும் பொருந்தாது என்று கருதுகிறார்கள்.
அவர்கள் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாக்க , உறவில் honesty-ஐ முன்னிலைப்படுத்த, emotional needs வேறுபட்டிருக்கும்போது இந்த relationship model-ஐ தேர்வு செய்கிறார்கள்.
நீங்கள் இதில் நுழையத் திட்டமிட்டால்… சில முக்கியக் குறிப்புகள்:
இது ஒரு ட்ரெண்ட் என்பதற்காகவோ அல்லது உங்கள் துணையின் வற்புறுத்தலுக்காகவோ இதில் இறங்காதீர்கள்.
- Set Hard Rules: எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதில் மிகத் தெளிவான விதிகள் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு: “என் நண்பர்களுடன் பழகக் கூடாது”, “வீட்டிற்கு அழைத்து வரக்கூடாது” போன்ற எல்லைகளை வகுக்க வேண்டும்.
- தொடர்ச்சியான பேச்சுவார்த்தை: உங்கள் மனது எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. இன்று உங்களுக்குச் சரியாகத் தெரிவது, நாளை வலியைத் தரலாம். அந்த வலியைத் துணையிடம் உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளும் சுதந்திரம் இருக்க வேண்டும்.
- மறுபரிசீலனை: எந்த நேரத்திலும் “எனக்கு இது பிடிக்கவில்லை, நாம் பழையபடி இருக்கலாம்” என்று சொல்லும் உரிமை இருவருக்கும் இருக்க வேண்டும்.
அதில் சேரும் முன் உங்களை நீங்களே கேட்க வேண்டிய கேள்விகள்
- நான் உண்மையாக இதற்கு readyஆ?
- நான் emotionally stableஆ?
- என் partner-ஐ இதனால் பாதிக்கப் போகிறேனா?
- இந்த உறவு என்னை grow பண்ணுமா… இல்ல confuse பண்ணுமா?
இந்த கேள்விகளுக்கு honest answer கொடுப்பது மிகவும் முக்கியம்.
ஒரு தனிப்பட்ட மற்றும் உணர்ச்சிகரமான உண்மை
மனதின் ஆழத்தில் நாம் அனைவரும் ஒரு பாதுகாப்பான, நிலையான அன்பையே தேடுகிறோம். ‘ஓபன் ரிலேஷன்ஷிப்’ என்பது ஒரு கத்தி மேல் நடப்பது போன்றது. அது சிலருக்கு விடுதலையைத் தரலாம், பலருக்குத் தீராத மனவலியைத் தரலாம்.
உங்கள் இதயத்தின் குரலைக் கேளுங்கள். உங்கள் துணை மற்றொருவரின் கையைப் பிடித்திருக்கும் போது, உங்களால் அதே புன்னகையுடன் அவரை வரவேற்க முடியுமா? உங்களால் உங்களை முழுமையாக ஒருவருக்கு அர்ப்பணிக்க முடியாமல் போகும் போது, அந்த உறவின் ஆன்மா சிதையாமல் இருக்குமா?
அன்பு என்பது சில நேரங்களில் பகிர்ந்துகொள்வதுதான், ஆனால் சில நேரங்களில் அது ஒருவருக்கு மட்டுமேயானது. உங்கள் மன அமைதி எங்கு இருக்கிறதோ, அதுவே உங்களுக்கான சரியான பாதை.
