திடீரென 7 நிமிடங்கள் காணாமல் போன டிராகன்: பிளாக் அவுட் டைமில் தப்பித்தது எப்படி?

Published On:

| By Kumaresan M

விண்வெளி பயணத்தில் எப்போதுமே ஒரு கட்டம்தான் மிகவும் அபாயக்கரமானது.விண்வெளியின் வெற்றிடத்தில் இருந்து பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும்போது ஏற்படும் உராய்வால், விண்கலத்தின் வெளிப்புறத்தில், வெப்பநிலை 1,600 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். இந்த வெப்பத்தை தாங்கும் விதத்தில் விண்கலம் வடிவமைக்கப்பட்டிருப்பதுதான் ஸ்பெஷல்.

இந்த சமயத்தில் விண்கலம் தீப்பந்து போல காணப்படும். அந்தளவுக்கு வெப்ப நிலை விண்கலத்தை சுற்றிலும் இருக்கும். இந்த வெப்பத்தை தாங்கும் வகையில் Phenolic-Impregnated Carbon Ablator அதாவது PICA என்ற மெல்லிய உலோகத்தை பயன்படுத்தி டிராகனை ஸ்பேஸ் எக்ஸ் உருவாகியுள்ளது. what is black out time ?

பூமியின் வளிமண்டலத்துக்குள் விண்கலம் மறுபடியும் நுழையும் போதுதான் அந்த ஒரு சம்பவமும் நடைபெறும். அதே போல, டிராகன் வளி மண்டத்தில் நுழைந்த போது, அந்த சம்பவம் நடந்தது. டிராகன் பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த போது, திடீரென நாசாவுடன் தொடர்பை இழந்தது. 7 நிமிடங்கள் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதிகாலை 3.15 மணிக்கு, அந்த விண்கலத்துடனான பூமியின் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது.

அப்போது விண்கலம், பூமியிலிருந்து 70 முதல் 40 கி.மீ உயரத்திலும், மணிக்கு சுமார் 27,000 கி.மீ வேகத்திலும் வந்து கொண்டிருந்தது. விண்கலத்தைச் சுற்றி 1900 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. அந்த 7 நிமிடங்களிலும் டிராகன் விண்கலத்தில் என்ன நடக்கிறது, அது எங்கு இருக்கிறது என்று கட்டுப்பாட்டு அறையில் இருந்த எவருக்கும் தெரியவில்லை. 3.20 மணிக்கு, நாசாவின் WB57 என்ற கண்காணிப்பு விமானத்தின் கேமராக்கள் டிராகன் விண்கலத்தை மீண்டும் படம் பிடித்தன.

அதன் பிறகே, கட்டுப்பாடு அறையில் இருந்தவர்களால் நிம்மதிப் பெருமூச்சு விடமுடிந்தது. அடுத்த சில நிமிடங்களில் டிராகன் விண்கலத்துடனான தொடர்பு மீண்டும் நாசாவுக்கு கிடைத்து விட்டது. பூமியை நோக்கி வரும் ஒவ்வொரு விண்கலமும், வளிமண்டல நுழைவு எனும் ஆபத்தான செயல்முறையின் ஒரு பகுதியாக, சில நிமிடங்களுக்குக் கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழப்பது அடிக்கடி நடப்பதுதான் என்று சொல்கிறார்கள். wwhat is black out time ?hat is black out time ?

அதாவது, வளிமண்டலத்துக்குள் நுழைந்ததும் விண்கலத்தை சுற்றிலும் ஏற்படும் அதிக வெப்பம் காரணமாக தகவல் தொடர்புக்கு பயன்படும் மின் காந்த அலைகள் செயல்பட முடியாத சூழல் ஏற்படும் இந்த காலக்கட்டத்தை ‘Blackout time’ என்றும் அழைக்கிறார்கள். இந்த காலக்கட்டத்தில் விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டால், கட்டுப்பாட்டு மையத்தில் இருக்கும் விஞ்ஞானிகளால் விண்வெளி வீரர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க முடியாது. அதேபோல விண்வெளி வீரர்களும் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்களுக்கு அவசரத் தகவல்களை அனுப்ப முடியாது.

கடந்த 2003 ஆம் ஆண்டு இந்திய வம்சாவளி வீரங்கனை கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் பயணித்த கொலம்பியா விண்கலம், பிளாக்அவுட் டைமில் காணாமல் போன போதுதான் வெடித்து சிதறியது. வளிமண்டலத்தில் நுழைந்த சமயத்தில் அதை சுற்றிலும் 1,300 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்தது. இந்த வெப்பத்தை தாங்க கூடிய ஓடுகள் சேதமடைந்திருந்ததை கண்டுபிடித்திருக்கவில்லை. இதனால், கொலம்பியா வெடித்து சிதறியது என்பது குறிப்பிடத்தக்கது. விண்கலத்தில் இருந்த கல்பனா உள்ளிட்டவர்கள் என்ன நடந்தது என்பதை உணர்வதற்குள் பஸ்பமாகி போன சோகம் நடந்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share