சுரைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.
நாம் வேண்டாம் என்று ஒதுக்கும் காய்கறிகளில்தான் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அப்படியான ஒன்றுதான் சுரைக்காய். இது ஒரு எளிமையான காய்கறியாகத் தோன்றலாம், ஆனால் அதன் ஆரோக்கிய நன்மைகள் மிகவும் வியக்கத்தக்கவை. குறிப்பாக கோடை காலத்தில், இது உடலைக் குளிர்விக்கவும், உள் சமநிலையைப் பராமரிக்கவும் உதவுகிறது. இதைச் சரியான அளவில் உட்கொள்வது எண்ணற்ற நன்மைகளை வழங்கும்.
உடல் எடையை குறைக்க உதவும் சுரைக்காய்
உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு சுரைக்காய் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. இதில் அதிகளவு நீர்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உள்ளன. சுரைக்காய் விரைவாக வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து, அதிகமாகச் சாப்பிடும் தேவையைத் தடுக்கிறது. அதில் உள்ள நார்ச்சத்து (Bottle gourd help weight loss) மெதுவாகச் செரிக்கப்படுவதால், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, உங்கள் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் சாறு அருந்துவது உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இது ஆற்றலை அதிகரிக்கவும் கொழுப்பை எரிப்பதை வேகப்படுத்தவும் உதவுகிறது.
குடலுக்கு நன்மை அளிக்கிறது
சுரைக்காயில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துகள் குடலுக்கு மிகுந்த நன்மை அளிக்கிறது. இது மலத்தை மென்மையாக்கி, மலச்சிக்கலைக் குறைக்கிறது. மேலும், இது குடல் செயல்பாட்டை மேம்படுத்தி, செரிமான அமைப்பை வலுப்படுத்துகிறது. சுரைக்காய்க்கு (Bottle gourd for gut health) உடலைக் குளிர்விக்கும் தன்மை இருப்பதால், அது நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மையைக் குறைக்க உதவுகிறது. இது வயிற்றில் உள்ள அதிகப்படியான அமிலத்தைச் சீராக்கி, வாயுத்தொல்லை மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளைப் படிப்படியாகக் குறைக்கிறது.
ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது
சுரைக்காயில் பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை ரத்த அழுத்தத்தை (blood pressure control) சீராகப் பராமரிக்க உதவுகின்றன. இது இதயத்தின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதோடு, இதய நோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கக்கூடும். சுரைக்காயில் குறைந்த கிளைசெமிக் குறியீடு இருப்பதால் ரத்தச் சர்க்கரை அளவு வேகமாக உயர்வதைத் தடுக்கிறது. அதிலுள்ள நார்ச்சத்து, மாவுச்சத்து உறிஞ்சப்படுவதை மெதுவாக்கி, சர்க்கரை அளவைச் சமநிலையில் பராமரிக்கிறது.
சருமத்திற்கும் சுரைக்காய் நன்மை தருகிறது
சுரைக்காயில் வைட்டமின் சி, துத்தநாகம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை சருமத்தை உள்ளிருந்து ஊட்டமளித்து, ஈரப்பதத்துடனும் (bottle gourd for skin) பொலிவுடனும் வைத்திருக்க உதவுகின்றன. மேலும், இது மயிர்க்கால்களை வலுப்படுத்தி, முடி உதிர்வைக் குறைக்கவும் உதவுகிறது. சுரைக்காய் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதிலுள்ள நீரும் இயற்கையான சேர்மங்களும் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்குத் துணைபுரிகின்றன. இதை உட்கொள்வது, குறிப்பாக கோடை காலத்தில், உடலைக் குளிர்விப்பதற்கும் சோர்வைப் போக்குவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
