உடல் எடை சர்ரென இறங்கும்.. இந்த மூலிகை தேநீர்களை ட்ரைப் பண்ணி பாருங்க..!

Published On:

| By Santhosh Raj Saravanan

weight loss drink green and ginger herbal teas benefits for health

உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் சில தேநீர்களை (Weight Loss Drink) இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

இப்போது மோசமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி இல்லாததன் காரணமாக மக்கள் எடை அதிகரிப்பு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.  இதனை தவிர்க்க கடுமையான உடற்பயிற்சி, நடை பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதில் முதலில் கைவிடச் சொல்வது பால் கலந்த தேநீர் குடிப்பதைத்தான். திடீரென தேநீர் குடிப்பதை நிறுத்திவிட்டால் பலருக்கும் டென்ஷன் ஏற்படுவது இயல்புதான். ஆனால், நீங்கள் தேநீரை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை.

ADVERTISEMENT

நாங்கள் குறிப்பிடப்போகும் தேநீர் உங்கள் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கும். மூலிகைத் தேநீர்களில் இருக்கும் நன்மைகள், அது உடல்நலனுக்கு எவ்வளவு பயன்படுகிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.

க்ரீன் டீ

தேநீரில் உள்ள கேட்டசின்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்தி, கொழுப்பை எரிப்பதை மேம்படுத்துகின்றன. காலையில் வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடித்தால், அதன் விளைவுகள் படிப்படியாகத் தெரியவரும். ஒரு நாளைக்கு இரண்டு கோப்பை க்ரீன் டீ  (green tea benefits) அருந்துவது, எளிமையான ஆனால் பயனுள்ள ஒரு பழக்கமாக மாறும். இதன்மூலம் உடல் எடை குறைப்புக்கும் க்ரீன் டீ பயன்படுகிறது.

ADVERTISEMENT
புதினா டீ

அடிக்கடி பசியால் அவதிப்படுபவர்களுக்கு புதினா தேநீர் (mint tea for weight loss) மிகவும் சரியானது. இது செரிமான மண்டலத்தைத் தளர்த்தி, வாயுத் தொல்லையிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. மேலும், இது பசியைக் கட்டுப்படுத்தி, தேவையற்ற நொறுக்குத்தீனி உண்பதைக் குறைக்க உதவுகிறது.

இஞ்சி டீ

வயிறு உப்புசம் மற்றும் வாயுவைக் குறைப்பதில் இஞ்சி டீ (ginger tea for digestion) மிகவும் உதவி புரிகிறது. பலர் வயிறு உப்புசத்தால் அவதிப்படுகிறார்கள், அதற்கு இஞ்சி ஒரு இயற்கையான தீர்வாகும். இது செரிமானத்தை விரைவுபடுத்துவதோடு, உணவுக்குப் பிறகான கனமான உணர்வையும் குறைக்கிறது.புதிய இஞ்சித் துண்டுகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து, 5 நிமிடங்கள் அப்படியே விட்டு பின்னர் சூடாகப் பருக வேண்டும். இதை உணவுக்கு முன்னரோ அல்லது பின்னரோ எடுத்துக்கொள்ளலாம்.

ADVERTISEMENT
பெருஞ்சீரக டீ

பெருஞ்சீரக டீ ஒரு பழமையான வீட்டு வைத்தியம் என்றாலும், அது மீண்டும் பிரபலமாகி வருகிறது. இது வயிறு உப்புசத்தைக் குறைத்து, உடலில் உள்ள அதிகப்படியான நீரை (fennel tea benefits) வெளியேற்ற உதவுகிறது. ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை வெந்நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் அதைக் குடிப்பது நன்மை பயக்கும்.

லவங்கப்பட்டை டீ

இலவங்கப்பட்டை தேநீர் ரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க உதவுகிறது. சர்க்கரை அளவு சமநிலையில் இருக்கும்போது, ​​அதிகமாகச் சாப்பிடுவது (weight loss drink) இயற்கையாகவே குறைகிறது. கொதிக்கும் நீரில் ஒரு சிறிய துண்டு லவங்கப்பட்டையைச் சேர்த்து காலையில் அருந்தலாம்.

மூலிகை தேநீர்களைத் தவறாமல் அருந்தினால் மட்டுமே அவை பலனளிக்கும். மூலிகை டீயில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.. உங்களுக்கு விருப்பமான இரண்டு அல்லது மூன்று தேநீர்களைத் தேர்ந்தெடுத்து, தினமும் குடித்து வரலாம். லேசான நடைபயிற்சி, சமச்சீரான உணவுடன் மூலிகை டீ சேர்த்துக்கொள்ளும்போது, ​​அவற்றின் செயல்திறன் இன்னும் சிறப்பாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share