2026இல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
நவம்பர் 1ஆம் தேதி ஆண்டுதோறும் ‘மாநில எல்லைப் போராட்டத் தியாகிகளை நினைவுகூரும் நாள்’ ஆகவும், சில அமைப்புகள் ‘தமிழ்நாடு நாள்’ ஆகவும் கொண்டாடுகின்றன.
இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர் தியாகிகளை நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (நவம்பர் 1) வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்! மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்! 2026இல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்! தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்! இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்!” என்று கூறியுள்ளார்.
கரூர் சம்பவத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக தனது அறிக்கையில் திமுகவை குறிப்பிட்டு விஜய் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
