விநாயகர் சதுர்த்தி : மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

Published On:

| By Kavi

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. இந்த விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட வெளிநகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.

ADVERTISEMENT

சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது.

இந்தநிலையில் மெட்ரோ ரயில் சேவையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் இன்று (ஆகஸ்ட் 26) வெளியிட்ட அறிவிப்பில், “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு. சனிக்கிழமை கால அட்டவணைப்படி நாளை ரயில்கள் இயக்கப்படும். காலை 05:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை ரயில்கள் இயக்கப்படும்.

பீக் நேரமான காலை 08:00 மணி – 11:00 மணி வரையிலும், மாலை 17:00 மணி – 20:00 மணி வரையிலும் 6 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலும்,

ADVERTISEMENT

நான் பீக் நேரத்தில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும்.

இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share