தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவை 118 இடங்கள். தற்போதைய நிலையில் தமிழக தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மைக்கான 118 இடங்கள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் 108 இடங்களைக் கைப்பற்றி உள்ள தவெக, 5 இடங்களில் வெற்றி பெற்ற பாமக, 5 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புகள் உள்ளன.
இதனிடையே
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆட்சியில் பங்கு- அதிகாரப் பகிர்வு என்ற முழக்கத்தை தவெக தலைவர் விஜய் ஏற்கனவே முன்வைத்திருந்தார். இதனால் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தரும் பாமக மற்றும் காங்கிரஸுக்கு தவெக அமைச்சரவையில் விஜய் இடம் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.
