விஜய், சூர்யாவை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்த விஜயகாந்த்

Published On:

| By Kavi

நடிகர் விஜய் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் செந்தூரப்பாண்டி. இந்தப் படத்தில் விஜயகாந்த் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் விஜய் சென்றடைந்தார்.

ADVERTISEMENT

அதன் பின்னரே விஜய் தமிழகம் முழுமையும் அறிமுகமான நடிகரானார். அதேபோன்று நடிகர் சூர்யாவிற்கு அமைந்த படம் விஜயகாந்த் முதியவர் வேடத்தில் நடித்த பெரியண்ணா.

வணிகரீதியாக பெரும்வெற்றியை பெறவில்லை என்றாலும் நடிகர் சூர்யாவை விஜய் போன்று குக்கிராம ரசிகனுக்கும் கொண்டு சேர்த்த படம் பெரியண்ணா.

ADVERTISEMENT

விஜயகாந்த் மறைவுக்கு சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை. யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை.

ADVERTISEMENT

 

கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து உயர்ந்த அண்ணன் விஜயகாந்த்தின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் பதிவில் அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், “ஒரு கண்ணில் துணிச்சலும், மறு கண்ணில் கருணையுமாக வாழ்ந்த அபூர்வ கலைஞன் அவர்.கடைக்கோடி மக்கள் வரை, அனைவருக்கும் உதவி செய்து, கேப்டனாக நம் அனைவர் மனதிலும் இடம்பிடித்தவர். விஜயகாந்தின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன். குடும்பத்தினருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என பேசியுள்ளார்.

அதுபோன்று நடிகர் விஜய் நேற்று இரவு தேமுதிக அலுவலகத்துக்கு நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விஜயகாந்த உடல் இருக்கும் பெட்டி மீது கை வைத்து, உடலை பார்த்தபடி கண்கலங்கி சில விநாடிகள் நின்ற விஜய், பின்னர், பிரேமலதா விஜயகாந்த்துக்கும், மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் இருவருக்கும் ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

கருப்பை வாரி பூசி ஜெயித்தவர் விஜயகாந்த் : மாரி செல்வராஜ்

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share