ரஜினி ரசிகர்களுக்கு மெகா சர்ப்ரைஸ்: ‘தலைவர் 173’ படத்தின் அதிரடி அப்டேட்!

Published On:

| By Santhosh Raj Saravanan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் திரைப்படங்கள் என்றாலே உலகளவில் இருக்கும் சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே அலாதியான எதிர்பார்ப்பு நிலவுவது வழக்கம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் பணிகளை அண்மையில்தான் ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் நடிக்கவிருக்கும் அவரது 173-வது திரைப்படமான ‘தலைவர் 173’ (Thalaivar 173) குறித்த மாஸான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கமல் தயாரிப்பில் இணையும் சூப்பர் ஸ்டார்

தற்காலிகமாக ‘தலைவர் 173’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை, ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் உலக நாயகனுமான கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ (Raaj Kamal Films International – RKFI) நிறுவனம் சார்பில் மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். முன்னதாக இத்திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்று பேசப்பட்ட நிலையில், தற்போது ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இளம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

ADVERTISEMENT
பிரம்மாண்ட நட்சத்திர பட்டாளமும், வில்லனாக ஷங்கரும்!

இத்திரைப்படத்தில் ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் வியக்கும் வகையிலான ஒரு நட்சத்திர கூட்டணி அமையவுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு எதிராக முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான பாசில் ஜோசப், இப்படத்தில் ரஜினியின் மகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரஜினிகாந்தின் மாஸான அதிரடி பாடல் காட்சியுடன் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

https://x.com/RKFI/status/2069309994554802234
இன்று மாலை 5 மணிக்கு மாஸ் என்ட்ரி

ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சரியாக மதியம் 12:12 மணிக்கு வெளியிட்டுள்ள பதிவின் மூலம் ‘தலைவர் 173’ படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று (ஜூன் 23) மாலை 5:00 மணிக்கு வெளியாகும் என்று ராஜ் கமல் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘Swag Arrival’ என்ற ஹேஷ்டேக்குடன் வெளியாகவுள்ள இந்த அறிவிப்பு, இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டிலாகவோ அல்லது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராகவோ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ரஜினி ரசிகர்கள் இப்போதே இணையத்தைக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

ADVERTISEMENT
Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share