முதல்வருக்கான தகுதி இல்லாதவர் விஜயகாந்த் – சுப.உதயகுமார்

Published On:

| By Balaji

அணு உலை எதிர்ப்பாளரான சுப.உதயகுமார், நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், தனது கட்சியான பச்சைத் தமிழகம் கட்சியின் சார்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளார். இன்று, நெல்லையில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயகுமார், 8 கோடி மக்கள் வாழும் தமிழகத்தை ஆள தகுதியும், பொறுமையும் வேண்டும். அந்தத் தகுதி கொஞ்சமும் இல்லாதவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்” எனத் தெரிவித்திருக்கிறார்.”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share