தமிழக அரசின் வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!

Published On:

| By Kavi

தமிழக அரசின் வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இவர் அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக செயல்பட்டவர்.

விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் இறக்குமதி வரி வழக்கில், விஜய் சார்பில் வழக்கறிஞராக ஆஜராகி விஜய் நாராயண் வாதாடியிருக்கிறார்.

ADVERTISEMENT

ஏற்கனவே அரசு தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்த பி.எஸ். ராமன் தனது பதவியை நேற்று (மே 12) ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share