திமுக, அதிமுக, சிபிஐ, தவாக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்துக்கு தாவியவர்களுக்கு ”கட்சி பொறுப்புகளை” அக்கட்சித் தலைவரான முதல்வர் விஜய் (Vijay) அறிவித்துள்ளார்.


முதல்வர் விஜய் இன்று ஆகஸ்ட் 3-ந் தேதி வெளியிட்ட அறிக்கை: தமிழக வெற்றிக் கழகத்தின், ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு (Media and Communications) அணி பின்வரும் முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
தலைமை நிலையச் செயலக முதன்மைச் செய்தித் தொடர்பாளர்கள் (Headquarter Secretariat Chief Spokespersons):
- சி.டி.ஆர். நிர்மல்குமார், B.E., LLB., MA. கழக இணைப் பொதுச்செயலாளர், (சட்டம் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர்)
- ஆ.ராஜ்மோகன், BA. கழகத் துணைப் பொதுச்செயலாளர், (பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்)
அணி பொறுப்பாளர்:
ஆ.ராஜ்மோகன், BA.
துணைப் பொதுச்செயலாளர், (பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்)
ஒருங்கிணைப்பாளர்கள்:
- எஸ். ரமேஷ், BE.
(இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்) - ஜே.கேத்தரின்பாண்டியன், D.T.Ed., B.Ed., M.A.
- க.சி.தி. அனந்தஜித் மகியா, MA.
முதன்மைச் செய்தித் தொடர்பாளர்கள்:
- முனைவர் திரு. சு.ச.வைகைச்செல்வன், M.A., B.L., D.Litt., D.Ed., Ph.D. (அதிமுக முன்னாள் அமைச்சர்)
- வி.பி.கலைராஜன், MA., BL. (திமுக கலை இலக்கிய அணி முன்னாள் செயலாளர்)
- சி.மகேந்திரன், BA. (மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்)
- ஜவஹர் அலி, B.Com. (அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர்)
- வா.புகழேந்தி. BA. (பெங்களூர் புகழேந்தி, கர்நாடகா மாநில அதிமுக முன்னாள் செயலாளர், புரட்சி அதிமுக நிறுவனர்)
தேசியச் செய்தித் தொடர்பாளர்கள்:
- பெலிக்ஸ் ஜெரால்ட், M.A., Dip. TTM., DCA.,
- வழக்கறிஞர் CA. Dr. திரு. எம்.சத்யகுமார், LLM, ACA, ACMA, ACS, CIMA – ACMA (UK), CISI – ACSI (UK), MA (Economics), Ph.D.
- எஸ்.வீர விக்னேஸ்வரன், BE.
- எம்.கே.தேன்மொழி பிரசன்னா, B.Tech (IT).
- அமெரிக்க வி. நாராயணன், nB.Com, MBA (Fin -USA) CPA (Texas- USA), CMA (USA). (காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி)
- வழக்கறிஞர் ஏ.சசிரேகா, MA., BL. (அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர்)
- பழ.செல்வக்குமார், DCA. (திமுக சுற்றுச் சூழல் அணி முன்னாள் மாநில துணைச் செயலாளர்)
- விவேக் கணநாதன், BE.
மாநிலச் செய்தித் தொடர்பாளர்கள்:
- முகில் வீரப்பன் (எ) மு.க.சிவகுமார், BA. (சந்தனக் கடத்தல் வீரப்பன் கூட்டாளி)
- மு.ஞான செல்வின் இன்பராஜ் (எ) மு.ஞா.செ.இன்பா, B.Sc.
- ச.முஹமது இப்ராஹிம் (எ) ராவூத்தர் இப்ராஹிம், DECE.
- ஜெகதீசபாண்டியன், BFA., DFT. (தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னாள் நிர்வாகி)
- பி.கே.ஜெயக்குமார்
- பம்மல் டி.கந்தசாமி, DC-TECH., BCA. (ஆம் ஆத்மி முன்னாள் நிர்வாகி)
- ஆர்.கே.ஜலீல்
- ஏ. தேவகுமார், BPT, F. Ortho., FFA., MBA., LLB.
- மு. சௌந்தரராஜா, BE., MA.
மாநில வலைத்தள செய்தித் தொடர்பாளர்கள்:
- தமிழன் ராகுல்காந்தி (எ) ராகுல்காந்தி, BE.
- சு.தியாகராஜன், DME.
- நரேஷ்குமார் ராஜேந்திரன், BA.
புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து, எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின்படியும், இந்தப் புதிய நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்கள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
