ராஜாவை விஞ்சிய ராஜ விசுவாசி வைகோ – கி.வீரமணி

Published On:

| By Balaji

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ காங்கிரஸ் – திமுக கூட்டணி இப்போது அவசியம் தேவைப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி மட்டும்தான் கொள்கை கூட்டணி. பணபலம், ஆட்சி அதிகாரம் போன்றவற்றை பெற்றிருக்கிற ஆளும் கட்சியை தகர்க்க திமுக காங்கிரஸ் கூட்டணியால் மட்டுமே முடியும்.இந்த கூட்டணிதான் வெல்லப்போகும் கூட்டணி. முகவரி கொடுத்தவருக்கு, தற்காலிக அரசியலுக்காக வைகோ துரோகம் செய்வது நல்லதல்ல. அவர் எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் ராஜாவை விஞ்சிய ராஜ விசுவாசியாகவே இருப்பார். திமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்க்க பேரம் பேசியதாக கருணாநிதியை, வைகோ கூறுவது கொஞ்சம் கூட நாகரீகம் அல்ல. அது உண்மைக்கு புறம்பானதும். விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவே மறுக்கும் போது வைகோ தன்னுடைய ராஜ விசுவாசத்தை அளவுக்கு அதிகமாக காட்ட தேவை இல்லை.’ என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share