மே.வங்கத்தின் பேரரசி மம்தா: மோடி

Published On:

| By Balaji

ஏப்ரல் 4- ம் தேதி மேற்குவங்கத்தில் முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, காரக்பூரில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது மோடி பேசுகையில், ‘கடந்த 5 ஆண்டுகால திரிணாமூல் ஆட்சியில், மேற்குவங்கத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மக்களின் எதிர்பார்ப்பையும், கனவுகளையும் மம்தா பேனர்ஜி தகர்த்துவிட்டார். அவர், ஒரு பேரரசிபோல் நடந்துகொள்கிறார். மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்காக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் ஒன்றுசேர்ந்து செயல்படுகின்றன. வன்முறையில் தொண்டர்களை இழந்த பாஜக மட்டுமே திரிணாமூல் கட்சியை எதிர்த்துப் போராடி வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைய மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்’’ என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share