தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி

Published On:

| By Balaji

தமிழக தேர்தல் பிரச்சாரத்திற்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி தமிழகம், புதுச்சேரிக்கு வரவிருப்பதால், தமிழக போலீஸார் அவரது வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கத் துவங்கி உள்ளார்கள்.ஆனால் ராகுல் என்று தமிழகம் வருகிறார் என்ற தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்பட வில்லை. தேர்தல் நெருங்கி வருவதால் மற்ற தேசிய கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்திற்கு வர இருப்பதால் , அரசுக்குச் சொந்தமான ஹெலிபேடுகள், தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிபேடுகள், பயணச் சாலைகள், மாவட்டந்தோறும் உள்ள மைதானங்களை கணக்கெடுத்து வருகிறார்கள் சி.ஐ.டி.போலீஸார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share