உங்களுடைய கிரெடிட் கார்டை இந்த மாதிரி பயன்படுத்தினால் நன்மைகள் அதிகம். இல்லாவிட்டால் அதுவே பிரச்சினையாகிவிடும்.
இந்தியாவில் இப்போது அதிகமான அளவில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர். கிரெடிட் கார்டில் பல நன்மைகள் இருந்தாலும், சில விஷயங்களில் கவனமாக இல்லாவிட்டால் அது நமக்கே பிரச்சனையாகிவிடும். சரியான கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுப்பது, ரிவார்டு பாயின்ட்களை சரியாகப் பயன்படுத்துவது, கிரெடிட் லிமிட்டை மீறாமல் இருப்பது, பில் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவது, மற்றும் EMI விருப்பங்களை கவனமாகப் பயன்படுத்துவது போன்றவற்றைச் செய்தால், கிரெடிட் கார்டு உங்களுக்கு எப்போதும் பயனுள்ளதாக இருக்கும்.
கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது சில முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொண்டால், அது உங்களுக்கு ஒருபோதும் பிரச்சனையாக இருக்காது. முதலில், நீங்கள் எந்த கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது மிக முக்கியம். உங்கள் தேவைகளையும், செலவுகளையும் முதலில் புரிந்துகொண்டு, அதற்கேற்ப கிரெடிட் கார்டைத் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக, நீங்கள் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால், பயணங்களுக்கு அதிக சலுகைகள் தரும் கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இப்படி உங்கள் தேவைக்கேற்ப சரியான கார்டைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
உங்கள் கிரெடிட் கார்டு வழங்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். உங்களுக்குத் தேவைப்படும்போது அவற்றைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். மேலும், உங்கள் ரிவார்டு பாயின்ட்கள் காலாவதியாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவற்றை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.
கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும்போது, அதன் லிமிட்டை (வரம்பு) மறக்காதீர்கள். அந்த லிமிட்டிற்குள் செலவு செய்யுங்கள். ஒருபோதும் உங்கள் கிரெடிட் கார்டின் முழு லிமிட்டையும் செலவு செய்யாதீர்கள். அப்படிச் செய்வது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.
உங்கள் கிரெடிட் கார்டு பில் தொகையை எப்போதும் சரியான நேரத்தில் செலுத்துங்கள். பில் செலுத்துவதில் அலட்சியமாக இருக்காதீர்கள். குறிப்பாக, குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்தும் வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அப்படிச் செய்தால், நீங்கள் அதிக வட்டி கட்ட வேண்டியிருக்கும். இது உங்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்கும்.
கிரெடிட் கார்டு EMI சில சமயங்களில் பயனுள்ளதாக இருந்தாலும், சில சமயங்களில் அது பிரச்சனையாகவும் மாறலாம். பல சமயங்களில், EMIக்கு அதிக வட்டி கட்ட வேண்டியிருக்கும். இது உங்கள் பணப்பையை வெகுவாகப் பாதிக்கும். எனவே, EMI விருப்பத்தைப் பயன்படுத்துபதற்கு முன், அது பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொண்டு கவனமாக முடிவெடுக்க வேண்டும்.
கிரெடிட் கார்டுகள் பல சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்குகின்றன. அதோடு, ரிவார்டு பாயின்ட்களும் கிடைக்கின்றன. இவை மிகவும் பயனுள்ளவை. இந்த நன்மைகளைக் கருத்தில் கொண்டு நீங்கள் ஒரு புதிய கிரெடிட் கார்டை வாங்கியிருந்தால், இந்தத் தகவல்கள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
