UPI பரிவர்த்தனைகளில் புதிய சாதனை: 6 மாதங்களில் 145 பில்லியன் பரிவர்த்தனைகள்!

Published On:

| By Minnambalam Desk

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் முக்கிய கருவியாக மாறியுள்ள UPI, நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் UPI மூலம் சுமார் 145 பில்லியன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 114 பில்லியனாக இருந்தது. இதன் மூலம் பரிவர்த்தனை அளவு 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

ரூ.177 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனை

பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மட்டுமின்றி, பண மதிப்பிலும் UPI தொடர்ந்து வளர்ச்சி கண்டுள்ளது. ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் UPI வழியாக ரூ.177 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு இதே ஆறு மாதங்களில் ரூ.148 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது மதிப்பு சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளது.

செப்டம்பரில் 24.07 பில்லியன் பரிவர்த்தனைகள்

செப்டம்பர் மாதத்தில் மட்டும் UPI மூலம் 24.07 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் பதிவான 24.51 பில்லியனுடன் ஒப்பிடும்போது இது 1.8 சதவீதம் குறைவு. இருப்பினும், தினசரி சராசரி பரிவர்த்தனைகள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. செப்டம்பரில் ஒரு நாளைக்கு சராசரியாக 802 மில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.

ADVERTISEMENT

அக்டோபரில் புதிய மாற்றம்

செப்டம்பர் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், UPI பரிவர்த்தனைகளுக்கான புதிய Merchant Discount Rate விதிமுறையும் கவனம் பெற்றுள்ளது. ரூ.2,000-க்கு மேற்பட்ட சில வணிகர் பரிவர்த்தனைகளுக்கு அக்டோபர் 15 முதல் 0.4 சதவீத MDR அமலுக்கு வர உள்ளது.

சிறிய மதிப்பிலான பரிவர்த்தனைகள் தொடர்ந்து கட்டணமின்றி நடைபெறும் நிலையில், பண்டிகைக் கால விற்பனை தொடங்குவதால் வரும் மாதங்களில் UPI பயன்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் துறை சார்ந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share