’துக்ளக்’ குருமூர்த்தி வீடு தேடி போன பியூஷ் கோயல்

Published On:

| By Mathi

RSS Gurumurthy

துக்ளக் பத்திரிகை ஆசிரியரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவருமான ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தியை அவரது இல்லத்தில் நேற்று இரவு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்து பேசினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக- பாஜக கூட்டணியில் கட்சிகளை இணைப்பது தொடர்பாக சென்னையில் முகாமிட்டு பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ADVERTISEMENT

சென்னையில் பியூஷ் கோயலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று சந்தித்தார். இச்சந்திப்பைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணைந்தது.

இதேபோல அதிமுகவின் எஸ்பி வேலுமணி- கேபி முனுசாமி, பாமக தலைவர் அன்புமணி. இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோரும் பியூஷ் கோயலை சந்தித்து பேசினர்.

ADVERTISEMENT

மேலும், செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் நாளை ஜனவரி 23-ந் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட ஏற்பாடுகளையும் பியூஷ் கோயல் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தியை அவரது இல்லத்துக்கு சென்று பியூஷ் கோயல் சந்தித்து பேசினார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share