மத்திய பட்ஜெட்டில் ’ரசாயன பூங்கா’ குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: அரிய வகை தாதுக்கள் மற்றும் காந்தங்கள் ஆகியவவை தொடர்பான ஒரு கொள்கை உருவாக்கப்பட்டது. இப்பொழுது தாதுக்கள் அதிகமான ஒடிசா, கேரளா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இங்கே உறுதியான அந்த ரேர் எர்த் (Rare Earth) வழித்தடங்களை உருவாக்க வேண்டும். அங்கே பிராசஸ் (Process) செய்வது, ஆராய்ச்சி ஆகியவை நடத்தப்படும்.
அதுமட்டுமல்லாமல் இந்த ரசாயன உற்பத்தி மற்றும் அந்த இறக்குமதி சார்பைக் குறைப்பதற்கும் அதற்காக திட்டங்களை வகுக்கிறோம். இந்த மாநிலங்கள் மூன்று பிரத்யேக இந்த ரசாயன பூங்காக்கள் அமைக்கப்படும். அது பிளக் அண்ட் பிளே (Plug and Play) மாடல் வகையிலே அமைக்கப்படும். இதன் மூலமாக வலுவான மூலதனப் பொருட்கள்…
மூலதனப் பொருட்கள் வலுவாக இருக்கும். அது என்பது உற்பத்திக்கும் மேம்பாட்டிற்கும் அது துணை நிற்கும். இந்த திறனை மேம்படுத்துவதற்காக நான் இந்த கீழ்க்கண்டவற்றை அறிவிக்கிறேன். உயர் தொழில்நுட்ப சாதன மையங்கள் பொதுச் சேவை நிறுவனங்கள் மூலமாக இரண்டு இடங்களிலே உருவாக்கப்படும். அது டிஜிட்டல் (Digital) மூலமாக தானியங்கி சேவைகளை வழங்கும். அது உள்ளூர் வகையிலே, உள்ளூர் அடிப்படையிலே அது சிறப்பாக சோதனை செய்யப்படும். அது குறைவான கட்டணத்திலே அது சேவையை வழங்கும்.
அதுமட்டுமல்லாமல் ஒரு திட்டம் இந்த உள்கட்டமைப்பு சாதனங்களை கட்டுமானம் செய்வதற்கும், உள்நாட்டு உற்பத்திக்கு உயர் விகித அடிப்படையிலே தொழில்நுட்பம் அதிகமான விஷயங்களில் இதை செயல்படுத்துவதற்கும் இது உதவும். இதன் மூலமாக இது பல அடுக்கு மாளிகையிலே இதை வைக்க முடியும். அங்கே தீ தடுப்பு சாதனங்களைப் பயன்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் குடைவுப் பாதைகளை உருவாக்கும், மெட்ரோ போன்ற குடைவுப் பாதைகளை உருவாக்கும் சாதனங்களுக்கும் இது உதவும்.
அதுமட்டுமல்லாமல் ஒரு திட்டத்தை யோசித்து அறிவிக்கிறேன், அந்த கண்டெய்னர் (Container) தயாரிப்பு தொழிலுக்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கு நான் அறிவிக்கிறேன். அது 10,000 கோடி ரூபாய் அதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு நான் இதனை அறிவிக்கிறேன்.
இந்த தொழிலாளர் சார்ந்த ஜவுளித் துறைக்காக நான் ஒருங்கிணைந்த திட்டத்தை அறிவிக்கிறேன். ஐந்து துணைப் பிரிவுகளை வைத்து, ஒன்று தேசிய நூலிழைத் திட்டம் – அந்த பட்டு, கம்பளி போன்ற விஷயங்களுக்காக. அதுமட்டுமல்லாமல் மனிதர்கள் உருவாக்குகிற நூலிழைகள், அது இல்லாமல் புதிய நிறுவனத்திற்கான நூலிழைகள், இந்த பழங்கால கிளஸ்டர்களை (Clusters) உருவாக்குவதற்கும் அவர்களுக்கு சாதனங்களுக்கும் அவைகளுக்கான தொழில்நுட்பத்திற்கும் பொதுவான பரிசோதனை மற்றும் சான்றிதழ் வழங்கும் திட்டத்திற்காகவும் இதை உருவாக்குகிறோம்.
தேசிய கைவினை மற்றும் கைத்தறி திட்டத்திற்காக தற்போதைய திட்டங்களை மேம்படுத்துவதற்காக அந்த குறிக்கோள் உடைய அந்த கைவினை கலைஞர்களுக்கும் நெசவாளர்களுக்கும் இதைத் தொடுக்கிறோம். இந்த தொழில்நுட்ப பொருளாதார விஷயங்களுக்காக இந்த ஆயத்த ஆடைகளுக்கும் ஜவுளிகளுக்கும் இதை கொடுக்கிறோம். இது நவீனப்படுத்துவதற்கும் இந்த ஜவுளித் துறை திறன் மேம்பாட்டிற்கு இது உதவும். அதுமட்டுமல்லாமல் கல்வி நிறுவனங்களோடு சேர்ந்து இந்த தொழில் நிறுவனங்களும் செயல்படும்.
மேலும் நான் ஒரு மிகப்பெரிய ஜவுளி பூங்காவை அறிவிக்கிறேன். அது சவால் நிலையிலே செயல்படும் தொழில்நுட்ப ஜவுளிகளாக பூங்காக்களாக இது செயல்படும். மகாத்மா காந்தி கிராம ஸ்வராஜ் முன்முயற்சியை நான் அறிவிக்கிறேன். அதன் மூலமாக காதி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் ஊக்கம் பெறும். இதன் மூலமாக உலகச் சந்தையின் தொடர்பு, பிராண்டிங் (Branding) உருவாக்குவது ஆகியவற்றிற்குப் பயன்படும். அதுமட்டுமல்லாமல் பயிற்சி வழங்குவது, திறன் மேம்பாடு ஆகியவற்றிற்கும் உற்பத்திக்கும் இது பயன்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
