தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் நடிகை ஒருவர் குறித்தும் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், அவருக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக வெற்றித் கழகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலாங்கரை இல்லத்தில் பாதுகாப்பு
தவெக தொண்டர்களின் முற்றுகைப் போராட்டம் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் வீட்டைச் சுற்றிச் சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் வீட்டின் அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டுப் பலத்த பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு காவல் இணை ஆணையர் விஜயகுமார் நேரில் வருகை தந்தார். கைது நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகாவிடம் அவர் தெரிவித்தார்.
அப்போது அங்கு இருந்த திமுக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் காவல்துறைக்கு நிச்சயம் ஒத்துழைப்பு தருவார் என்றும், வழக்கறிஞர்கள் வரும் வரை பொறுமை காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நீலாங்கரையில் தொடரும் பதற்றம்
இதனிடையே, உதயநிதி ஸ்டாலினின் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வருகை தந்துள்ளார். இதனால் நீலாங்கரை பகுதி முழுவதும் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் காவல் ஆணையர் அமல்ராஜ் வருகை தந்து ஆய்வு செய்து வருகிறார்.
இன்றைய தினமே உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
