“உங்க அம்மா” : கேரள எம்.பி-யிடம் டென்ஷனான தம்பிதுரை

Published On:

| By Kavi

மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை டென்ஷனான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நாடாளுமன்றத்தில் நேற்று பொதுத்தேர்வுகள் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டன. 

ADVERTISEMENT

மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தில் அதிமுக எம்பி தம்பிதுரை பேசிக் கொண்டிருந்தார். 

“நீட் தேர்வு 2010 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசால் கொண்டுவரப்பட்டது. அப்போது அந்த கூட்டணியில் திமுகவும் இருந்தது.. 

ADVERTISEMENT

தற்போது அரசியல் ஆதாயத்திற்காக நீட் தேர்வு எதிர்ப்பது போல் நாடகமாடுகிறார்கள். 

நீட் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருந்தபோது தமிழ்நாட்டின் மருத்துவ சேர்க்கை கொள்கை மதிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் அம்மா வலியுறுத்தினார்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

தொடர்ந்து நீட் தேர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியது தொடர்பாகவும் பேசினார். 

அப்போது தம்பிதுரை முன்னாள் முதல்வரை அம்மா, அம்மா என்று குறிப்பிட்டு பேசிய நிலையில் அவருக்கு பின்னால் இருந்த கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி ஜான் பிரிட்டோஸ், எந்த அம்மா… எந்த அம்மா என்று ஆங்கிலத்தில் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார். 

இது தம்பிதுரை பேசுவதற்கு இடையூறாக இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவர் டென்ஷன் ஆகி, “யுவர் அம்மா” (உங்க அம்மா) என்று பதில் அளித்துவிட்டு மீண்டும் தனது உரையை தொடங்கினார். 

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share