தமிழக முதல்வர் விஜய் தயவு செய்து தனது டேபிளில் இருக்கும் பைல்களை திறந்து பார்க்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘நேற்று முன்தினம் பேரவையில் பேசிய முதலமைச்சர், தனது மேஜையில் மூன்று கோப்புகள் இருப்பதாகவும், அந்தக் கோப்புகளைத் திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என்றும் எங்களது அரசைக் குற்றம் சாட்டும் வகையில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். அந்தக் கோப்புகளைத் தயவுசெய்து அவர் திறந்து பார்க்க வேண்டும்; அதன் மீது அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் நாங்கள் கேட்டுக்கொள்வது. எதற்காகப் பயப்படுகிறீர்கள்? எதற்காகக் காலம் தாழ்த்துகிறீர்கள்? இதை மூன்று மாதங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஜோசியக்காரர் சொன்னால்தான் அந்த கோப்பைத் திறந்து பார்ப்பீர்களா? நல்ல நேரம் ஏதாவது பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?’ என்று தெரிவித்தார்.”
