ADVERTISEMENT

சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.100 கோடி: பேரவையில் உதயநிதி அறிவிப்பு!

Published On:

| By Selvam

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஜூன் 27) சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மானியக்கோரிக்கை நடைபெற்றது. அப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

“7,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.100 கோடி சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ரூ.10 கோடியில் 10,000 சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்படும்.

ரூ.5.55 கோடியில் 37 மாவட்டங்களில் 111 வானவில் மையங்கள் அமைக்கப்படும்.

ADVERTISEMENT

ரூ.4.65 கோடியில் 200 வட்டாரத்தில் 6,083 ஊராட்சிகளில் மாதவிடாய் கால சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சி பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் வளர் இளம் பெண்களுக்கு அளிக்கப்படும்.

ரூ.90 கோடியில் 40,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி வழங்கப்படும்.

ADVERTISEMENT

பெருநகர சென்னை மாநகராட்சியில் 8 இடங்களில் ரூ.50 இலட்சம் செலவில் மதி கஃபே (Mathi Cafe)  அமைக்கப்படும்.

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய ரூ.15 லட்சத்தில் 25 அடுக்குமாடி குடியிருப்புகளில் (Apartment Bazaars) கண்காட்சிகள் நடத்தப்படும்.

ரூ.5.62 கோடியில் 7,500 தொழில் முனைவோர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்தியாவின் மிகப்பெரிய சிறுத்தை சஃபாரி

தேசிய விளையாட்டில் தங்கப்பதக்கம்… ஊக்கத்தொகையை உயர்த்திய உதயநிதி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share