தமிழக சட்டமன்றத்தில் இன்று (ஜூன் 27) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்றது.
இதில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
“செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூர், நுங்கம்பாக்கம், வேளச்சேரி வளாகத்தில் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
SDAT-யின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 2,330 இலிருந்து 2,600-ஆக உயர்த்தப்படும்.
நாள் ஒன்றுக்கான உணவுப்படி ரூ.250-லிருந்து ரூ.300-ஆக உயர்த்தப்படும்.
சீருடை மானியத்தொகை ரூ.4,000-லிருந்து ரூ.6,000-ஆக உயர்த்தப்படும்.
உபகரண மானியத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்படும்.
விளையாட்டு விடுதிகளுக்கு ரூ.5 கோடியில் நவீன விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
சென்னை, கோவை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிய விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும்.
இளைஞர்களை நல்வழிப்படுத்த புதிய இளைஞர் கொள்கை அறிமுகப்படுத்தப்படும்.
ஒலிம்பிக் விளையாட்டுக்கு மானியம் உயர்த்தப்படுகிறது. அதன்படி ஒலிம்பிக் விளையாட்டுக்கு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாகவும், ஒலிம்பிக் அல்லாத விளையாட்டுக்கு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக மானியம் உயர்த்தப்படுகிறது.
தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.14 லட்சத்திலிருந்து ரூ.28 லட்சமாக உயர்த்தப்படும்.
நாட்டு நலப்பணி திட்ட முகாம்களுக்கு இந்த ஆண்டு முதல் தொடர் செலவினமாக ரூ.50 லட்சம் வழங்கப்படும்.
வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற வீரர்/ வீராங்கனைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ரூ.2 லட்சம் நிதி ரூ.4 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
மாநிலத்தின் உள் வெளி விளையாட்டரங்கங்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்படும்.
தலைசிறந்த பத்து விளையாட்டு வீரர்கள் புதிய பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆப்கானிஸ்தான் தோல்விக்கு காரணம் சொன்ன வாகன்
“தக்லைஃப்” படத்தில் இணைந்த முக்கிய நடிகர்: யார் தெரியுமா?