Cheap CM ஆட்சி.. 1 யூனிட் மின்சாரம் ரூ.41-க்கு வாங்குவதா? உதயநிதி கண்டனம்- அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு!

Published On:

| By Mathi

Udhayanidhi-Nirmal Kumar

ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41-க்கு தமிழக அரசு வாங்க இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?

நடத்துவது ஆட்சியும் இல்லை – செய்வது நிர்வாகமும் இல்லை – ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா?

ADVERTISEMENT

இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள்.

இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு

ஆனால் உதயநிதி ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டை மின்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் மறுத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் கூறுகையில், “1 யூனிட் மின்சாரத்தை ரூ.37 முதல் ரூ.41 வரை கொள்முதல் செய்யப் போவதில்லை. இன்று மின்சாரக் கொள்முதலுக்கான டெண்டர்கள் திறக்கப்பட்டன. இதில் பல நிறுவனங்கள் மிக அதிக விலையைக் குறிப்பிட்டுள்ளன.

அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான மின்சாரம் நம்மிடம் போதுமான அளவில் உள்ளது. அடுத்த ஆண்டு கோடைக்காலத்திற்கான மின்சாரத்தை முன்கூட்டியே கொள்முதல் செய்வதற்காகவே இந்த டெண்டர் கோரப்பட்டது. ஆனால், நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ள விலை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது.

இதற்கிடையே, அடுத்த 20 ஆண்டுகளுக்கான மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நடுத்தர கால மற்றும் நீண்ட கால டெண்டர்களை வெளியிட உள்ளோம். எனவே, அதிக விலை கொடுத்து இனி கொள்முதல் செய்யப்படாது. தற்போது கோரப்பட்டுள்ள டெண்டரை ரத்து செய்யவும் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share