அன்பில் மகேஸ் கைது அவசியமற்றது: கி.வீரமணி

Published On:

| By Kavi

அன்பில் மகேஸ் கைது அவசியமற்றது என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ADVERTISEMENT

அவரை இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் சென்று சந்தித்தார். அன்பில் மகேஷ் கைதுக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி திமுகவினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அன்பில் மகேஷ் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

”விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது அவசியமற்றது” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”மேனாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று (26.10.2026), தனியார் பள்ளிகள் அங்கீகாரம் தொடர்பான வழக்கின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைகளுக்கு சட்ட ரீதியாக அவர் முழு ஒத்துழைப்பு வழங்கிவரும் நிலையில், இந்தக் கைது அவசியமற்றது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் நடைபெறும் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள், சிறுவர், சிறுமிகள் காணாமல் போகுதல் போன்ற பிரச்சினைகளைத் திசை திருப்பவும், காழ்ப்புணர்வு காரணமாகவும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஏற்க முடியாது. அரசும், காவல்துறையும் கவனம் செலுத்த வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share