டிஜிட்டல் திண்ணை: ஜெயிலில் அன்பில் மகேஷ்.. அலட்டிக் கொள்ளாத திமுக.. அன்று நடந்த ‘அந்த’ சம்பவங்கள்!

Published On:

| By Minnambalam Desk

Anbil Mahesh-DMK Reaction

வைஃபை ஆன் செய்ததும், “ மீசக்கார நண்பா… உனக்கு ரோஷம் அதிகம்டா…”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. ”நட்பதிகாரம்” ரேஞ்சுக்கு ஷேர் செய்ய போறீங்க போல..

கண்டுபிடிச்சிட்டீங்களே போல.. அன்பில் மகேஷ் விவகாரத்துல தொடக்கம் முதலே ஒவ்வொரு மூவ்ஸையும் நாம அப்டேட் செஞ்சுகிட்டே வந்தோம்.. நேத்து அன்பில் மகேஷ் அரெஸ்ட்-க்கு பிறகும் கூட கடைசி நிமிட பேச்சுவார்த்தைகளை பத்தியும் டீட்டெயிலா சொல்லி இருந்தோம்..

ADVERTISEMENT

அன்பில் மகேஷை கைது செஞ்ச போலீஸ், அவரை கோர்ட்டில ஆஜர்படுத்துறதுக்கு முன்னாடி ஒரே களேபரமாகிடுச்சுங்க ப்ரோ.. ”கோர்ட்ல நீதிபதி வெயிட் பண்றாரு.. ஆனா அன்பில் மகேஷை அங்கே இங்கேன்னு அலைகழிச்சுகிட்டு இருக்கீங்களா?”ன்னு ரொம்பவே டென்ஷனாகி போலீசுடன் சண்டை போட்டாரு திமுக மாஜி அமைச்சர் சேகர்பாபு..

அதுக்கு பிறகு ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி சத்தியமூர்த்தி முன்னாடி அன்பில் மகேஷை ஆஜர்படுத்த, ஜெயிலுக்கு அனுப்ப கூடாதுன்னு அவர் தரப்புல வில்சன் வாதிட்டாரு.. அரசு தரப்புல இதுக்கு கடுமையாக எதிர்க்க, கடைசியாக அன்பில் மகேஷ் ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் ப்ரோ..

ADVERTISEMENT

விஜய் சர்க்காரில் ஜெயிலுக்கு போயிருக்கிற முதல் திமுக மாஜி அன்பில் மகேஷ்தான்.. ஆனா திமுக சைடுல இருந்து ரொம்ப பெருசா அதிரி புதிரி ரியாக்‌ஷன் எல்லாம் இல்லைதான்.. வழக்கமான ‘சில வரி’ கண்டன அறிக்கைகளை மட்டும் ஃபார்மலா விட்டிருக்காங்க ப்ரோ..

திமுகவோட இந்த ‘சைலண்ட்’ மோடுக்கு என்ன காரணம் ப்ரோ?

இதை பத்தி திமுக சீனியர் தலைவர்களிடம் நாம பேசுனப்ப, “அன்பில் மகேஷின் தாத்தா அன்பில் தர்மலிங்கம்- தலைவர் கலைஞர்; அவரது பையன் பொய்யாமொழி- கலைஞர் மகன் ஸ்டாலின்; அவங்க பையன் அன்பில் மகேஷ்- உதயநிதின்னு தலைமுறைகளாக நெருக்கமான குடும்ப உறவா இருக்கிறவங்கதான்.. உதயநிதி, சினிமாவில் நடிகராக நுழைந்தப்ப உதயநிதி ரசிகர் மன்றத்தை உருவாக்கி அதன் தலைவராகவும் இருந்தவர் அன்பில் மகேஷ்தான்.

ADVERTISEMENT

இப்படியான உறவு பந்தத்தாலதான் தன்னோட கேபினட்டில் அன்பில் மகேஷை, 43 வயசுல அமைச்சராக்கினார் ஸ்டாலின்.. டிஆர்பி ராஜா, சிவசங்கர், மதிவேந்தன்னு பல யூத்கள் கேபினட்டுல இருந்தாலும் அன்பில் மகேஷின் ஆக்டிவ்வான செயல்பாட்டை, சட்டசபையில அன்பில் மகேஷ் புள்ளி விவரங்களோட பேசுறதை.. எல்லாத்தையும் ஸ்டாலின் பாராட்டி இருக்கிறார்..

பொதுவாக இந்த மாதிரி அரெஸ்ட் எல்லாம் நடந்தா, எங்க தலைவரும் சரி.. கட்சிக்காரங்களும் சரி ரியாக்சன்ஸே வேற மாதிரிதான் இருக்கும்.. ஆனால் மகேஷ் விவகாரத்துல பார்மலாதான் இருக்கு..

இவ்வளவு ஏன்.. திமுக கட்சிக்காரங்க பல பேரு பட்டாசு வெடிச்சு கொண்டாடாத குறைதான்.. அந்த அளவுக்கு ஒன்றிய செயலாளர்கள் முதல் பல நிர்வாகிகள் மனசுக்குள்ள சந்தோசமா இருக்காங்க.. ஏன்னா, தன்னோட பதவி காலத்துல அன்பில் மகேஷ் அப்படி நடந்துகிட்டதுதான்..

சார்.. பொதுவாக கட்சியில இருக்கிற ஒன்றிய, நகர செயலாளர்களுக்கு லோக்கலில் எப்படி மதிப்பு வரும்? தன்னை தேடி வந்து டிரான்ஸ்பர் வாங்கி கொடுங்கன்னு.. அதை செஞ்சு கொடுங்க.. இதை செஞ்சு கொடுங்கன்னு ஒரு பப்ளிக் சொன்னால் அதை முடிச்சு கொடுத்துட்டா போதும்.. அது நமக்கு சப்போர்ட்டா இருக்கும்.. அவ்வளவுதான்.. இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களை ஆளும் கட்சியாக இருக்கும் போது கீழே இருக்கிற நிர்வாகிகள் எதிர்பார்ப்பாங்க.. அதை மினிஸ்டர்ஸ் முடிஞ்ச அளவு செஞ்சும் கொடுக்கனும்.

ஆனால் அன்பில் மகேஷ் இந்த விஷயத்துல தலைகீழா நடந்துகிட்டாருதான்.. பொதுவாகவே தன்னை பார்க்க வர்றவங்ககிட்ட முகம்கூட கொடுத்து பேசமாட்டாரு.. என்னதான் சிரிச்சுகிட்டே இருந்தாலும் அரக்க பரக்க..அங்க போகனும்.. இங்க போகனும்.. அந்த மீட்டிங் இருக்குன்னு சொல்லிட்டு ‘பறந்து போக’த்தான் பார்ப்பாரே தவிர பக்கத்துல நின்னு எந்த ஊரு? என்ன பிரச்சனை? செய்ய முடியுமா? முடியாதா?ன்னு கட்சிக்காரன்கிட்ட கரிசனையா பேசுற வழக்கமே இருந்தது இல்லை.. இப்படி இருந்ததாலதான் இன்னைக்கு அன்பில் மகேஷை கைது செஞ்சாலும் கூட திமுகவோட நிர்வாகிகள் ரொம்ப பெருசா கண்டுக்காமல் கடந்து போய்கிட்டு இருக்காங்க..

அதே மாதிரி அன்பில் மகேஷை ரொம்பவே நம்பின எங்க தலைவர் குடும்பமும் அவரோட ஒவ்வொரு ஆக்டிவிட்டீஸையும் ரீசண்ட்டா தெரிஞ்சு ரொம்பவே அப்செட் ஆகிட்டாங்க.. உதயநிதியின் மிக நெருங்கிய நண்பராகவும் அன்பில் மகேஷ் இருந்ததால, கட்சியில மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் பதவி முதலில் கொடுக்கப்பட்டது. 2020-ல் கே.என்.நேரு, முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார்.. அப்ப திருச்சி வடக்கு, தெற்குன்னு இருந்த மாவட்டங்களில்ல திருச்சி மத்திய மாவட்டமும் உருவாக்கப்பட்டுச்சு.. இதுல திருச்சி தெற்கு மா.செ.வா அன்பில் மகேஷை நியமிச்சாங்க.. தாத்தா போல பேரனும் மா.செ.வாக்கப்பட்டாருன்னு நாங்க எல்லாரும் சந்தோஷப்பட்டோம்..

அந்த சமயத்திலேயே, திருச்சியில அசைக்க முடியாத சக்தியா இருக்கிற சீனியரான கே.என்.நேருவுக்கு இணையாக ‘அரசியல்’ செய்யனும்னா எனக்கு பணம் தேவைன்னு சொல்லி ஒவ்வொரு மாதமும் உதயநிதியிடம் கட்சி செலவுக்குன்னே ஒரு அமவுண்ட் வாங்கிட்டு இருந்தார் அன்பில் மகேஷ். இப்ப நடந்த எலக்‌ஷனப்ப கூட, தேர்தல் செலவுக்கு பணமே இல்லைன்னு சொல்லி கடைசிநேரத்துல ரூ.25 கோடியை வாங்கிட்டுதான் போனார் மகேஷ்.

இப்படி எல்லா வகையிலும் அன்பில் மகேஷுக்கு ஆதரவா, அரவணைப்பா இருந்த ஸ்டாலின் குடும்பத்துக்கு கடந்த சில மாதங்களாக கிடைச்ச தகவல் அத்தனையும் அதிர்ச்சிதான்..

குறிப்பாக அமைச்சரா இருந்தப்ப, ‘பார்ட்டி பண்ட்’ அப்படிங்கிற பேருல இத்தனை நூறு கோடி ரூபாய் வசூலிச்ச அன்பில் மகேஷ், ஒரு பைசாவை கூட கட்சிக்கு கொடுக்காம மறைச்சுட்டாரு அப்படிங்கிறது எல்லாம் ரொம்ப அதிர்ச்சிதான்.. எங்களுக்கே அப்படின்னா ‘தலைவர்’ குடும்பத்துக்கு எப்படி இருக்கும்?

இத்தனைக்கும் இதை பத்தி ஸ்டாலின் கேட்டப்ப கூட, “அப்படி எல்லாம் இல்லைங்க பெரியப்பா”ன்னு சொல்லி சமாளிச்சுட்டாரு அன்பில் மகேஷ்.

இந்த பார்ட்டி பண்ட் கேஸ் பிரச்சனை ரொம்பவே பெரிசான நிலையில அன்பில் மகேஷ் செஞ்சதுதான் எங்க எல்லாரையுமே ரொம்பவே ஆடிப் போக வெச்சது.. பத்திரிகைகளில கூட அரசல் புரசலா வந்தது.. யூடியூப் சேனல்களில் கூட பேசுனங்க.. அது புரளின்னுதான் சொன்னாங்க..

ஆனா உண்மையிலேயே, தன்னால இந்த கேஸில இருந்து தப்பவே முடியாதுன்னு தெரிஞ்ச அன்பில் மகேஷ், ஆளும் கட்சியான தவெகவுக்கு போறதுன்னு முடிவு எடுத்து பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தினாரு.. அவங்க சைடுல இருந்தும் கூட ஓகே சொல்லிட்டாங்க..

இது ஸ்டாலினுக்கும் தெரிஞ்சு கூப்பிட்டு விசாரிச்சார்.. இதனால தவெகவுக்கு போற மூவ்ஸை சைலண்ட்டா நிறுத்திட்டார் மகேஷ். இதுக்கு அப்புறமா திடீர்னு தவெகவை விமர்சிக்கிற மாதிரி பேட்டி எல்லாம் கூட கொடுத்தார் அன்பில் மகேஷ்.. அதனால தவெக சைடுல இருந்து மறுபடியும் அவர்கிட்ட மூவ் பண்ணாம விட்டுட்டாங்க..

ஆனாலும் அன்பில் மகேஷ் தலைக்கு மேல தொங்குற கத்தியா இருக்கே இந்த கேஸ்.. அதனால அவரோட மனைவி ஜனனி, சிஎம் விஜய் சைடு பேசுனாங்க.. அப்ப கூட, “மொத்தம் 117 ஸ்கூல் நிர்வாகிகள் கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்காங்க.. அவங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செட்டில் செஞ்சுடுங்க.. பிரச்சனை முடிஞ்சிடும்”னு கவர்மெண்ட் சைடுல இருந்து ஒரு ஆப்ஷனும் கொடுத்தாங்க.. இதை அன்பில் மகேஷ் தரப்புல மூவ் கூட செய்யாம விட்டுட்டாங்க.. இது கவர்மெண்ட்டை கடுப்படிக்க வெச்சிடுச்சு..

இதுக்கு பிறகுதான் செப்டம்பர் 16-ந் தேதி அன்பில் மகேஷ் வீட்டுல மத்திய குற்றப் பிரிவு போலீசார் ரெய்டு நடந்துனாங்க.. அப்ப நடந்த ஒரு சம்பவமும் கூட ஸ்டாலின் குடும்பத்தை ரொம்பவே கோபப்பட வெச்சது..

அன்னைக்கு ரெய்டு முடிஞ்ச பிறகு பிரஸ்ஸை பார்த்த அன்பில் மகேஷ், “விசாரணையில் எல்லாமே சரியாக இருக்கிறது; எந்த பழியும் போட முடியவில்லை என்பதற்காக, “டார்கெட் நீங்க இல்லைங்க.. டார்கெட் ‘அவர்’தான்.. அவர் பேரை சொல்லுங்களேன்.. விட்டுவிடுகிறோம்” என்று சொன்னாங்க… அதாவது விஜய் கவர்மெண்ட்டோட டார்கெட்டே உதயநிதிதான்.. தனக்கு ஒன்னும் தெரியாது அப்படிங்கிற டோனில சொல்லி இருந்தார் மகேஷ்..

இது எங்க எல்லாருக்கே ரொம்ப அதிர்ச்சியாதான் இருந்தது.. ஆனால் ரெய்டுக்கு போன போலீஸ் அதிகாரிங்ககிட்ட நாங்க கேட்டப்ப, “அப்படி எல்லாம் ஒரு வார்த்தை கூட மகேஷ்கிட்ட நாங்க சொல்லவே இல்லை”ன்னு உறுதியா சொன்னாங்க.. இந்த விவகாரம் ஸ்டாலின், உதயநிதிக்கும் போனது.. அப்ப போலீஸ் எதுவுமே சொல்லாமலேயே, ‘கோர்த்துவிடுற’ வேலையைத்தான் செய்யுறாரா மகேஷ்? அப்படிங்கிற கோபம் எங்க எல்லாருக்குமே வந்துச்சு.

இப்ப கூட, ஆளுநர் அனுமதி கொடுக்கனும் அப்படிங்கிறதுக்குதான் கோர்ட்டுக்கு மகேஷ் போனாரு.. பொதுவாக இந்த மாதிரி கேஸ் வரும்.. அப்ப எல்லாருமே முன்ஜாமீன் கேட்டு மனு போடமாட்டாங்க.. ஏன்னா முன்ஜாமீன் பெட்டிசன் டிஸ்மிஸ் ஆச்சுன்னா அரெஸ்ட்தான்னு தெரியும்.. அப்படி இல்லையா? பெட்டிசனுக்கு என்ன வேணும்னாலும் நடக்கும்னு சுப்ரீம் கோர்ட்டுக்கு போறதுக்கும் ரெடியா இருந்திருக்கனும்.. ஆனா அப்படி எல்லாம் எதுவுமே செய்யாம தேவை இல்லாம முன்ஜாமின் பெட்டிச்ன் போட்டு அது டிஸ்மிஸ் ஆகி, ”வாலண்டியரா வண்டியில ஏறுன” கதையா இப்ப அன்பில் மகேஷ் ஜெயிலுக்கு போயிட்டாரு..

அதாவது சார்.. அன்பில் மகேஷை பத்தி நாங்க பார்த்தது தெரிஞ்சது, தலைவர் ஸ்டாலின் குடும்பம் பார்த்தது தெரிஞ்சது எல்லாம் ஒரு முகம்.. ஆனா எங்க எல்லாருக்குமே அவர் காட்டாம இருந்த ‘பல முகங்கள்’ ஒவ்வொன்னாக வெளியே வந்ததாலதான் அவரோட கைது பத்தி ’யாருக்குமே’ ரொம்ப அக்கறை எல்லாம் இல்லைங்க”ன்னு சொல்றாங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share