டிஜிட்டல் திண்ணை: திடீரென பதவி தந்த விஜய்.. அப்செட்டில் ‘விஜயபாஸ்கர்’கள்- ஏன்?

Published On:

| By Minnambalam Desk

Digital Thinnai: TVK Party Posts: Why are the 'Vijayakabhaskars' upset with Vijay?

வைஃபை ஆன் செய்ததும், ”கொடி பறக்குற காலம் வந்தாச்சு.. வந்தாச்சு”ன்னு பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. இது எந்த ”கொடி”?

அதிமுகவில இருந்து எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செஞ்சுட்டு தவெகவுக்கு தாவினாங்களே, அவங்க எல்லாத்துக்கும் உடனே பதவி எதுவும் தராம இருந்தாரு சிஎம் விஜய். இதை பத்தி நாம கூட பேசியிருந்தோம்..

ADVERTISEMENT

சிஎம் விஜய்யை பொறுத்தவரைக்கும், “எலக்‌ஷனுக்கு முன்னாடி அதிமுகவில இருந்து தவெகவில இருந்து வந்த செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர் எல்லாத்துக்கும் நல்ல பதவி கொடுத்திருக்கிறோம்.. இப்ப ஆட்சி அமைச்சதுக்கு பிறகு வந்தவங்க கொஞ்ச நாள் கட்சிக்காக பாடுபடட்டும்.. உள்ளாட்சி எலக்‌ஷன், லோக்சபா எலக்‌ஷன் எல்லாம் முடிஞ்ச பின்னாடி அவங்களுக்கு கட்சி, ஆட்சியில பொறுப்பு கொடுப்போம்”ன்னுதான் ஒரு நிலைப்பாடு எடுத்திருந்தாரு..

இதனால, அதிமுகவில இருந்து தவெகவுக்கு சாரை சாரையா போய்கிட்டிருந்தவங்க டக்குன்னு குறைஞ்சுட்டாங்க.. கடந்த சில வாரங்களாக அதிமுகவில இருந்து தவெகவுக்கு பெருசா யாரும் போகவும் இல்லை.. இதனால விஜய் தன் முடிவை மாத்திகிட்டு, எலக்‌ஷனுக்கு பிறகு தவெகவுக்கு கட்சி மாறி வந்தவங்க எல்லாத்துக்கும் பதவிகளை கொடுத்திருக்காரு..

ADVERTISEMENT

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு தவெக துணைப் பொதுச்செயலாளர்+ கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் பதவி; சி. விஜயபாஸ்கருக்கு புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளர் + புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர்; மரகதம் குமாரவேலுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி; இசக்கி சுப்பையாவுக்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர்; சத்யபாமாவுக்கு திருப்பூர் தென்கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி தந்திருக்காங்க..

இதை பத்தி விசாரிச்சப்ப, “அதிமுகவில இருந்து தவெகவுக்கு வந்த எம்ஆர் விஜயபாஸ்கர், மரகதம் குமாரவேல் போன்ற சிலருக்கு மாநில பதவி கொடுக்கப்பட்டிருக்கு.. ஆனா சி.விஜயபாஸ்கர் போன்றவங்களுக்கு மாவட்ட பதவிகள் கொடுக்கப்பட்டிருக்கு..

ADVERTISEMENT

சி.விஜயபாஸ்கரைப் பொறுத்தவரைக்கும், செங்கோட்டையனுக்கு கொடுத்த மாதிரி 4,5 மாவட்டங்களுக்கு சேர்த்து ‘மண்டல அமைப்பு’ செயலாளர் பதவி கொடுங்கன்னு கேட்டிருந்தார். அதுக்காகவே ரொம்பவே தவெகவில செலவும் செஞ்சுகிட்டே இருந்தாரு.. இப்போது புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளர் பதவியும் அவரோட விராலிமலை தொகுதியையே ஒரு மாவட்டமாக்கி அதுக்கு மா.செ.வாக்கியும் அறிவிச்சிருக்காரு விஜய்.. இதுல கொஞ்சம் சி.விஜயபாஸ்கருக்கு அதிருப்தி இருந்தாலும் கூட வெளியே காண்பிக்க முடியாதபடி ‘அரசியல்’ செஞ்சாகனுமேன்னு இருக்கிறாராம்..

இதை போலவே கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்புல விசாரிச்சப்ப, “செங்கோட்டையன் தவெகவில் இணைஞ்சப்ப அவருக்கு நிர்வாக குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர், மேற்கு மண்டல அமைப்பு செயலாளர் பதவி கொடுத்தார் விஜய்.. அதே போல மாநில பதவியுடன் கரூர், திருச்சி, திருப்பூர், திண்டுக்கல்லை உள்ளடக்கிய மண்டல அமைப்பு செயலாளர் கொடுங்கன்னு எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேட்டிருந்தார்..

இப்ப துணை பொதுச்செயாளர் பதவியுடன் கரூர் மாவட்ட அமைப்பு செயலாளர் பதவியை கொடுத்திருக்கார் விஜய்.. மாநில பொறுப்பு கிடைச்சதுல சந்தோஷம்தான்..

அதே நேரத்துல குறைந்தபட்சம் கரூர் மாவட்டத்துடன், கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் வரக் கூடிய வேடசந்தூர் சட்டசபை தொகுதி, கரூர் எல்லையான குஜிலியம்பாறை ஒன்றியத்தை உள்ளடக்கிய தவெக திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தையும் சேர்த்து ஒரு மண்டலமாக்கி அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்திருந்தா இன்னும் சந்தோஷம்தான்”ன்னு சொல்றாங்க ப்ரோ.

சரிங்க ப்ரோ.. அமித்ஷாவை எடப்பாடி சந்திச்சிருக்காரே?

ஆமாங்க ப்ரோ.. திருவண்ணாமலை, புதுச்சேரி நிகழ்ச்சிகளுக்காக சென்னைக்கு வந்த அமித்ஷாவை விமான நிலையத்துல எடப்பாடி பழனிசாமி சந்திச்சு பேசுனாரு.. அதிமுகவில எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் இப்பவும் எடப்பாடிக்கு எதிராகப் பேசிகிட்டுதான் இருக்காங்க.. இந்த சூழ்நிலையில அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திச்சாரு.. ஆனாலும் எடப்பாடிகிட்ட அமித்ஷா, அப்படி ஒன்னும் முகம் கொடுத்து பேசலை..

இதைபத்தி பாஜக தரப்புல விசாரிச்சப்ப, “எடப்பாடி பழனிசாமி மேல அமித்ஷாவுக்கு வருத்தம் இருக்குதுதான்.. “எலக்‌ஷன் நேரத்துல நிறைய விஷயங்களை சொன்னோம்.. அதை எல்லாத்தையும் எடப்பாடி செய்யலை.. நாம சொல்றபடி எல்லாம் எடப்பாடி செஞ்சிருந்தா இன்னும் பெட்டரா இருந்திருக்கும்..அதுக்காக அவரை நாம விட்டுடவும் முடியாது”ன்னு எங்க லீடர்ஸ்கிட்ட அமித்ஷா சொல்லி இருக்கிறார்.

அதோட, ”2029 எலக்‌ஷனப்ப அதிமுக இப்ப இருக்கிற மாதிரி எல்லாம் இல்லாம பழைய மாதிரி ஒற்றுமையாக பலமான கட்சியா இருக்கனும்..ஏற்கனவே வெளியே போன சசிகலா, டிடிவி தினகரன் தொடங்கி இப்ப இருக்கிற எஸ்பி வேலுமணி கோஷ்டி வரைக்கும் அத்தனை பேரும் ஒன்றாக இருந்தாதான் சரியா வரும். இதைத்தான் நாங்க விரும்புறோம்”ன்னு எடப்பாடிகிட்ட ஏற்கனவே சொல்லியும் அதிமுகவில அதிருப்தியை வளர விட்டுகிட்டே இருக்கிறாரு எடப்பாடி.. அப்படிங்கிற வருத்தமும் அமித்ஷாவுக்கு இருக்குது”ன்னு சொல்றாங்க ப்ரோ..

ப்ரோ.. சிஎம் விஜய் பத்தி அமித்ஷா எதுவும் சொல்லி இருக்கிறாரா?

இதைப் பத்தியும் நாம விசாரிச்சப்ப, “இதுவரைக்கும் மத்திய அரசுக்கு எதிராக சிம் விஜய் வெளிப்படையாக எந்த விமர்சனத்தையும் வைக்கலை.. மத்திய அரசின் கொள்கைகளையும் விமர்சிக்கலை.. மத்திய அரசு சொல்ற விஷயங்களை ‘கமுக்கமாக’ செஞ்சுகிட்டுதான் இருக்காங்க.. தமிழகம் தொடர்பான பிரச்சனைகளில் கூட மத்திய அரசை பத்தி சொல்றப்ப கவனமாகதான் சிஎம் விஜய் செயல்பட்டுகிட்டு இருக்காரு.. இதுக்கும் காரணம் இருக்கு..ஏன்னா, முதல்வர் விஜய்க்கு போன ரிப்போர்ட்ட்ல, “ நீங்க எப்ப மத்திய அரசை கடுமையாக விமர்சிச்சு பேசுவீங்கன்னு திமுக ரொம்பவே வெயிட் பண்ணிகிட்டு இருக்குதுன்னு.. அதை வெச்சு திமுக தன்னோட கேம் ஆட காத்திருக்குது”ன்னு சொல்லப்பட்டிருந்துச்சு..

அதனால சிஎம் விஜய், மத்திய அரசு விஷயத்துல ரொம்ப கவனமாகவே இருக்கிறார்.

ஆனால் அமித்ஷாவைப் பொறுத்தவரைக்கும், “ஜோசப் விஜய்” அப்படிங்கிறதை அழுத்தமாக அவர் சொல்கிறார்.. இது நமக்கு எந்த வகையிலும் எதிர்காலத்துக்கும் சரியா வராதுன்னு தமிழக பாஜக லீடர்ஸ்கிட்ட தொடர்ந்து சொல்கிறார்..

அதோட, ”தமிழ்நாட்டுல திமுக, அதிமுகன்னு பெரிய கட்சிகள் எல்லாம் இருந்தும் விஜய்யை எதுவும் பண்ண முடியலையா? நாங்கதானே சப்போர்ட் பண்றோம்னு சொன்னோம்.. ஏன் விஜய் ஆட்சிக்கு எதிராக எதுவும் செய்யாம இருக்கீங்க?”ன்னு இன்னமும் கேள்வி கேட்டுகிட்டு இருக்கிறார்”ன்னு சொல்றாங்க ப்ரோ.. என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share